ஐ.நா., சபையில் ஹிந்திக்கு அங்கீகாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நியூயார்க் :ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை பல மொழிகளில் வெளியிடும் இந்தியாவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. முதல் முறையாக இதில் ஹிந்தியும் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக, அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் உள்ளன. இதில், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச், பயன்பாட்டு மொழியாக உள்ளன.

latest tamil news

இந்நிலையில், ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், பல மொழிகளில் வெளியிடுவதற்கான தீர்மானத்தை இந்தியா தாக்கல் செய்திருந்தது. இந்த தீர்மானம் ஐ.நா., சபையில் நிறைவேறியுள்ளது.
முதல் முறையாக இதில் ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வங்கம், உருது ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா.,வின் இந்த நடவடிக்கையை பாராட்டுவதாக, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி குறிப்பிட்டுஉள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.