புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் திட்டத்தின், திரு.வி.க.நகர் மண்டலம், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.90.59 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஜகன்நாதன் தெருவில் ரூ.49.62 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மின் கோட்ட உதவி பொறியாளர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் ஜகன்நாதன் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதன்பிறகு ஜவஹர் நகரில் புதுப்பிக்கப்பட்ட கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப் பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும், பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள், 4 சக்கர தள்ளு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், திருமண நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

முன்னதாக, தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 250 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்களையும், அனிதா அர்ச்சிவர்ஸ் அகாடெமியில் தையல் பயிற்சி முடித்த 349 மகளிர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.