ஓவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கை வெளியிடும் முதல் நாடாகிறது கனடா

ஒவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறவுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் 2020 இல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தனி நபர் சிகரெட்டுகள் மீது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக மாறவிருக்கும் கனடா தான், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றிய முதல் நாடு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சிகரெட் புகைப்பவர் ஆயுள் காப்பீட்டை எடுக்க 80% அதிக பிரீமியம் செலுத்த வேண்டும்

“தனிப்பட்ட புகையிலை பொருட்களில் சுகாதார எச்சரிக்கைகளைச் சேர்ப்பது, சிகரெட்டை அடிக்கடி அணுகும் இளைஞர்கள் உட்பட,இந்த அத்தியாவசிய செய்திகள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய உதவும்” என்று கருதுவதாக கனடா அரசு நம்புகிறது.

சிகரெட் மீதான எச்சரிக்கை செய்திகள் வழக்கமானதாக மாறியிருக்கலாம் என்ற கவலையை நிவர்த்தி செய்ய வேண்டும், ஒரு அளவிற்கு, அந்த எச்சரிக்கைகள், தங்களது தாக்கத்தையும் இழந்திருக்கலாம் என்று கவலைப்படுகிறோம்” என்று கனடாவின் மனநலம் மற்றும் அடிமையாதல் (Mental Health and Addictions) அமைச்சர் கரோலின் பென்னட் கூறினார்.

2023 இன் இரண்டாம் பாதியில் இந்த மாற்றத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள கனடா அரசு, “ஒவ்வொரு சிகரெட் புகைப்பதும் உடலில் ஒரு துளி விஷத்தை சேர்ப்பதற்கு சமம்” என்று குறிப்பிட்டார்.

இந்த முன்மொழிவை, கனடாவின் CEO Doug Roth இன் ஹார்ட் அண்ட் ஸ்ட்ரோக் அறக்கட்டளை வரவேற்றுள்ளது. “கனடா இப்போது உலகிலேயே சிகரெட்டுகளுக்கான வலுவான சுகாதார எச்சரிக்கை அமைப்பைக் கொண்டிருக்கும்” என்று கூறினார்.

மேலும் படிக்க | நானும் போலீஸ்தான் ; நானும் போலீஸ்தான் – டம்மி போலீசை போட்டு கொடுத்த மனைவி!

“கொடிய தயாரிப்புகளான சிகரெட் மீதான நடவடிக்கைகள், இளைஞர்கள் மற்றும் புகைப்பிடிக்காதவர்களுக்கு இந்த போதையின் மீதான ஈர்ப்பை மேலும் குறைக்க உதவும், அத்துடன் தற்போதைய புகைப்பிடிப்பவர்களை விட்டு வெளியேறுவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்” என்று நம்பப்படுகிறது.

“இது ஒரு உலக முன்னுதாரணத்தை அமைக்கப் போகிறது. நீங்கள் புறக்கணிக்க முடியாத ஒரு எச்சரிக்கை இது. ஒவ்வொரு புகைப்பிடிப்பவர்களையும் இந்த எச்சரிக்கை செய்தி சென்றஅடையப் போகிறது” என்று  கனடியன் கேன்சர் சொசைட்டியின் மூத்த கொள்கை ஆய்வாளர் ராப் கன்னிங்ஹாம் கூறுகிறார்.

புள்ளிவிவரங்கள் கனடாவின் படி, 2020 இல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். தற்போது கனடா அரசு எடுக்கும் தீவிர நடவடிக்கையால் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க | சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.