சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்: மார்க்சிஸ்ட்

தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டுமென்று கடலூரில் மார்க் சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடலூரில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் பெண்கள் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கிய சம்பவமாக உள்ளது. இந்தச் சம்பவத்தை அரசு ஒரு எச்சரிக்கை மணியாகஎடுத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக் கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு ரூ. 5 லட்சம் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. அதை வரவேற்கும் நேரத்தில் இந்த இழப்பீடு போது மானதாக இல்லை. உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் வீட்டுக்குஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மிகுந்த சேதம டைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் வரும்போது இந்த வீடுகள் தாங்காது. புதிய தொகுப்பு வீடுகளை கட்டித் தர வேண்டும். இனி தொகுப்பு வீடுகள் கட்டும் போதும், அரசு திட்டங்களில் வீடு கட்டும் போதும் கழிவறை, குளியலறை உள்ள வீடுகளாக கட்டித்தர வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை, தங்களுக்கு சொந்தமானது என்றுதீட்சிதர்கள் கூறுவது உண்மைக்கு விரோதமானது. தமிழக அரசு நிதானமான முறையில் இந்தப் பிரச்சினையை கையாளுகிறது. தனிச்சட்டம் இயற்றி நடராஜர்கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள், சிற்பங்கள், பாதுகாக்கப்படும்.

கடந்த 8 ஆண்டுகளில் மோடிஅரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவில்லை. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்.

வேலை வாய்ப்பை உருவாக் கவில்லை, தமிழகத்தில் அண்ணாமலை நினைத்ததை எல்லாம் பேசிக் கொண்டு வருகிறார். தமிழக அரசு குழந்தை திருமணத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த நேர்காணலின் போது மார்க்சிஸ்ட் மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், மாநகர செயலாளர் அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.