தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தப்பட்டது(Photos)


தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட
கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான
புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை
மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கணக்கான பௌத்த பிக்குகள்  குறித்த பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

அத்துடன், இராணுவத்தினர் பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை
இனத்தவர்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி  நிறுத்தப்பட்டது(Photos)

மக்களின் ஆர்ப்பாட்டம்

எனினும் குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின்
ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்
வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.

அவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித
மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால்
உத்தரவிடப்பட்டிருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள்
அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று
அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை
மேற்கொள்வதற்கும், ‘கபோக்’ கல்லினால் ஆன புத்தர் சிலைஒன்றினை குருந்தூர்
மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தமிழ் மக்களின்
ஆர்ப்பாட்டத்தின்மூலம் தடுக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி  நிறுத்தப்பட்டது(Photos)

இராணுவத்தினரின் நடவடிக்கை

குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய
ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

இருப்பினும்
இன்றையதினம் முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த
வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான
பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசு வாகனங்கள் மற்றும்
பேருந்துகள் மூலம் வருகைத் தந்திருந்தனர்.

இவ்வாறாக வழிபாட்டு முயற்சிகள் இடம்பெறுவதற்கு அப்பகுதித் தமிழ் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக சயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் இணைந்து
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத்
தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி  நிறுத்தப்பட்டது(Photos)

தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் விஜயம்

தொடர்ந்து குறித்த பகுதிக்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்
அனுரமானதுங்க வருகைதந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன்
கலந்துரையாடியதுடன், குருந்தூர் மலையையும் பார்வையிட்டிருந்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அனுரமானதுங்க,

குருந்தூர்மலைப் பகுதியில் தொல்லியல் ஆய்வின்மூலம் கிடைத்த எச்சங்களை பேணிப்
பாதுகாப்பதற்காக புணர்நிர்மாணம் செய்யும் வேலையையே தாம் முன்னெடுப்பதாகவும்,
அங்கு புதிதாக கட்டுமானங்களை கட்டடங்கள் எதனையும் தாம் கட்டவில்லை எனவும்
தெரிவித்தார்.

அத்தோடு தமது திணைக்களத்துக்கும், பௌத்த துறவிகளுக்கும், இராணுவத்திற்கும்
எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி  நிறுத்தப்பட்டது(Photos)

இருப்பினும் அவர் தெரிவித்த கருத்திற்கு மாறாக முன்பிருந்ததைவிட குருந்தூர்
மலையில் பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல்
திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குருந்தூர்மலையில் பெருமளவான, பௌத்த
பிக்குகளும், முப்படையினரும் வழிபாடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததை
அவதானிக்க முடிந்தது.

அதேவேளை இதன்போது குருந்தூர் மலையைச்சூழ உள்ள வயல்நிலங்கள் தொல்லியல்
இடமெனக்கூறி, பௌத்தபிக்கு தமிழ் மக்களைத் தடுப்பது தொடர்பிலும் தொல்லியல்
திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி  நிறுத்தப்பட்டது(Photos)

அவ்வாறு பௌத்த பிக்குகள் தடுப்பதற்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என அவர்
அதற்குப் பதிலளித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக
குறித்த விசேட வழிபாட்டு முயற்சிகள் நிறுத்தப்பட்டது.

அந்தவகையில் முன்னெடுக்கப்பட்ட விசேட வழிபாடுகளுக்கான முயற்சிகள்
நிறுத்தப்பட்டதுடன், பிறிதொருநாளில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள்
பிரதிநிதிகள், தமிழ் மக்கள், இதனோடு தொடர்புடைய திணைக்களங்கள், அமைச்சர்
உள்ளிட்டவர்களுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று
மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.