மொத்தம் 12 பேர்கள்… ரஷ்ய துருப்புகளுக்கு சிம்மசொப்பனமான பிரித்தானிய சிறப்பு படை


பிரித்தானியாவின் முன்னாள் SAS வீரர்கள் குழு ஒன்று உக்ரைனில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக களமிறங்கியதுடன், 20 ரஷ்ய தளபதிகளைக் கொன்று விளாடிமிர் புடினுக்கு சிம்மசொப்பனமாக மாறிய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மொத்தம் 12 பேர்கள் கொண்ட அந்த முன்னாள் SAS வீரர்கள் குழு உக்ரைனில் நீண்ட 6 வாரங்கள் செலவிட்டு ரஷ்யாவின் முக்கிய தளபதிகள் பலரை வீழ்த்தியுள்ளது.

மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூலிப்படை என அறியப்படும் Wagner படையின் 15 முக்கிய வீரர்களையும் கடந்த மாதம் இவர்கள் கொன்றுள்ளனர்.

மொத்தம் 12 பேர்கள்... ரஷ்ய துருப்புகளுக்கு சிம்மசொப்பனமான பிரித்தானிய சிறப்பு படை

முன்னாள் SAS வீரர்கள் குழுவின் போர் அனுபவமானது தலா 10 ஆண்டுகள் என கூறப்படுகிறது.
அவர்கள் முற்றிலும் சுயமாக உதவி செய்து கொள்பவர்கள் எனவும் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சிறப்பாக அணுகக்கூடியவர்கள் எனவும், அந்த 12 வீரர்களில் குறைந்தது இருவர் பயிற்சி பெற்ற போர் மருத்துவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்முனையில் களம் கண்டவர்கள் எனவும் 29 முதல் 62 வயதுடையவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த 12 பேர் குழுவானது, சமூக ஊடகம் வழியாகவே திரட்டப்பட்டு, உக்ரைனில் களமிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 12 பேர்கள்... ரஷ்ய துருப்புகளுக்கு சிம்மசொப்பனமான பிரித்தானிய சிறப்பு படை

மட்டுமின்றி, இந்த 12 பேர் கொண்ட குழுவானது உக்ரைன் வீரர்களுக்கு நுணுக்கமான போர் பயிற்சியும் அளித்துள்ளது.
முக்கியமாக, போரின் இறுதி நாள் வரையில் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட உறுதி பூண்டுள்ளதாகவும், எந்த காரணத்தினாலும் ரஷ்ய துருப்புகளிடம் உயிருடன் பிடிபடாமல் இருக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ரஷ்ய தளபதிகள் விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருவதாக தகவல் வெளியானது.
மட்டுமின்றி, பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் 49 ரஷ்ய கர்னல்களை விளாடிமிர் புடின் இழந்துள்ளது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மொத்தம் 12 பேர்கள்... ரஷ்ய துருப்புகளுக்கு சிம்மசொப்பனமான பிரித்தானிய சிறப்பு படைSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.