கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உக்ரைன் -ரஷியா போரின் விளைவாக, உக்ரைன் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உலக தானிய சந்தையில் முக்கிய பங்கு வகித்துவரும் உக்ரைனில், தற்போது ரஷியா நடத்திவரும் தாக்குதல்களால் உணவு தானியங்கள் அழிக்கப்பட்டு வுருகின்றன.
ஏற்கெனவே அறுவடை செய்யப்பட்ட கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில்,, உக்ரைனில் உள்ள உணவு தானிய கிடங்குகள் அழிக்கப்பட்டு வருவதால் தற்போது அறுவடை செய்யப்படும் தானியங்களையும் சேமிக்கவும் இடமில்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் ஹிந்திக்கு அங்கீகாரம்… சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை!
உக்ரைனில் விவசாயம் செழிக்கும் கிழக்கு பகுதியில் தற்போது ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால் . கருங்கடல் துறைமுக பகுதியான மைகோலை உள்ளிட்ட இடங்களில் உள்ள தானிய கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் டன் கோதுமை, மக்காச்சோளம், சூரியகாந்தி விதைகள் முற்றிலும் நாசமடைந்திருக்கலாம் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பினரும் மாறி, மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருதால் விவசாய நிலங்கள் தீப்பற்றி எரிவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், உக்ரைனில் விலைவாசி உயர்வு ஏற்படுவதுடன் பட்டினிச்சாவுகளும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.