ஒரே ஒரு எழுத்தை மாற்றி மோசடி: கவனமா இருங்க HDFC வங்கி வாடிக்கையாளர்களே!

எச்டிஎஃப்சி வங்கியின் பெயரை ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றி போலியான லிங்க் அனுப்பி மோசடி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளதாக HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் தொடங்கியது முதலே மோசடிகளும் ஆரம்பித்து விட்டன என்பதும், மோசடிகள் மூலம் அப்பாவி வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட மோசடியால் HDFC வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

HDFC வங்கி

HDFC வாடிக்கையாளர்களை குறிவைத்து ஒரு எஸ்எம்எஸ் அல்லது மெயில் அனுப்பப்படுகிறது. அந்த எஸ்எம்எஸ் அல்லது மெயில் HDFC என்பதற்கு பதிலாக HDCF என்று ஒரே ஒரு எழுத்தை மாற்றி அனுப்பப்படுகிறது. ஆனால் அதை சரியாக கவனிக்காமல் வாடிக்கையாளர்கள் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பயனாளிகள் தங்களது பான் கார்டு தகவல்களை அப்டேட் செய்யும்படி அறிவுறுத்தப்படுவதாக தெரிகிறது.

பான்கார்டு அப்டேட்

பான்கார்டு அப்டேட்

இதன்மூலம் HDFC வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு விவரங்களை தெரியாமல் அப்டேட் செய்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் திருடப்பட்டு விடும் அபாயம் உள்ளதாகவும் இதில் பலர் ஏமாந்து இருப்பதாகவும் HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிஷ்ஷிங்
 

பிஷ்ஷிங்

பிஷ்ஷிங் (Phishing) எனப்படும் இந்த மோசடி, மீனுக்குத் தூண்டில் போடுவது போல வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்கள் மூலமே பெற்று அவர்களது மொத்த பணத்தையும் கொள்ளை அடிக்கும் ஒரு முறையாகும். இந்த மோசடியில் சிக்காமல் இருக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு HDFC சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அந்த அறிவுரைகள் என்னவென்று பார்ப்போம்.

அறிவுரைகள்

அறிவுரைகள்

* அடையாளம் தெரியாதவர்கள் அனுப்பும் எஸ்எம்எஸ், இமெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம். அதோடு அதுபோன்ற எஸ்எம்எஸ், இமெயில்களை உடனே டெலிட் செய்துவிடுங்கள்.

* அடுத்து செய்ய வேண்டியது என்னவென்றால் இதுபோன்ற இமெயில் ஐடிகளை இனம்கண்டு உடனடியாக பிளாக் செய்துவிடுங்கள்.

* HDFC வங்கி குறித்த எந்தவொரு தகவலை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்.

* எஸ்எம்எஸ், இமெயிலில் வரும் spelling-ஐ சரிபார்க்கவும். உதாரணமாக HDFC வங்கி என்பதற்கு பதிலாக HDCF வங்கி என பெரும்பாலான மோசடி பேர்வழிகள் பயன்படுத்துகின்றனர்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மோசடி பேர்வழிகள் பல்வேறு விதங்களில் புதுப்புது முறைகளை கையாண்டு மோசடி செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் நமது பணத்தை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HDFC Bank warns customers of PAN fraud, Issues alert; here’s all you need to know

HDFC Bank warns customers of PAN fraud, Issues alert; here’s all you need to know | ஒரே ஒரு எழுத்தை மாற்றி மோசடி: கவனமா இருங்க HDFC வங்கி வாடிக்கையாளர்களே!

Story first published: Monday, June 13, 2022, 7:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.