பிரித்தானியாவில் அத்துமீறி நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அழைத்து செல்லும் முதல் விமானத்திற்கு அந்த நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டில் இருந்து மிகச் சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக அபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய அரசு, புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பும் செயல்திட்டத்தை அறிவித்தது.
பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடுரமானது என குற்றம் சாட்டிய சில மனித உரிமை அமைப்பு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அமைப்பு, அரசின் திட்டத்திற்கு எதிராக அவசர கால தடை மற்றும் இடைகால தடைகளை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது கடந்த வாரம் நீதிமன்றத்தில் நடைப்பெற்ற நிலையில், பிரித்தானிய அரசின் புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கும் அனுப்பும் செயல்திட்டத்திற்கான முதல் விமானத்திற்கு அனுமதி அளித்தது.
அத்துடன் மனித உரிமை அமைப்புகளுக்கு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியும் வழங்கியது.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ரூவாண்டா நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் முதல் விமானத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் அனுமதி வழங்க மறுத்துள்ளது.
மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அசல் தீர்ப்பில் “தலையிட முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய அரசின் திட்டப்படி மொத்தம் 130 புகலிடக் கோரிக்கையாளர்கள் வரை ரூவாண்டாவிற்கு அனுப்பி வைக்கப்படலாம் என தெரிவந்துள்ளது, மேலும் நாளைய(முதல்) விமான பயணத்தில் 11 பேர் வரை இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அழிவுகரமான வெற்றிட குண்டை பயன்படுத்தும் ரஷ்யா: முதல்முறையாக குற்றம்சாட்டிய பின்லாந்து!
புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பும் பிரித்தானிய அரசின் திட்டமானது, பயங்கரமானது என இளவரசை சார்லஸ் தனிப்பட்ட முறையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.