வரும் 23ல் பொதுக்குழு கூட்டம்.. இன்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை.! வெளியாகப்போகும் முக்கிய முடிவு.!!

ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமைகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுகவின் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 – வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் டாக்டர் அ . தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், வரும் 23 ஆம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உடன் காலை 10 மணிக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.