ஆக்சன் ஹீரோ பைஜூவுக்கு இரண்டாம் பாகம்

வெற்றிபெற்ற படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாக்கும் சீசன் தற்போது மலையாளத்திலும் துவங்கியுள்ளது. அந்தவகையில் நிவின்பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பைஜூ என்கிற படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் நிவின்பாலி நடித்த, கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றி பெற்றதால், அடுத்ததாக 2016ல் மீண்டும் நிவின்பாலி நடிப்பில் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார் அப்ரிட் ஷைன்.

வழக்கமான அதிரடி போலீஸ் படங்கள் போல அல்லாமல் ஒரு நகரத்தில் அன்றாடம் நடக்கும் குற்றங்களும் அவற்றின் மீது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் நடவடிக்கைகளும் என புதிய பாணியில் கதை சொல்லியிருந்தார்கள். இந்தப்படத்தை நிவின்பாலியே தயாரித்திருந்தார். துப்பறிவாளன், நம்ம வீட்டுப்பிள்ளை படங்களில் கதாநாயகியாக நடித்த அனு இம்மானுவேல் இந்தப்படத்தில் தான் நிவின்பாலிக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் பாகத்தில் இடம்பெற்றவர்களே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.