இலங்கை அதிபர் உடன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்திப்பு

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசினாா்.

இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவா்கள் தொிவித்தனா்.

இந்த சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பினரும் உறுதிபடுத்தி உள்ளனா்.

இந்த சந்திப்பின் போது, இந்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (ஐஓஆர்) இணைச் செயலர் கார்த்திக் பாண்டே ஆகியோர் உடனிருந்ததாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டாில் தொிவித்து உள்ளாா்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.