Nothing Phone (1): நத்திங் போன் (1) வாங்கலாம் – ஆனா இப்டி பண்ணா மட்டும் தான் முடியும்!

Nothing Phone 1 Flipkart: உலகளவில் பெரும்பாலான மக்கள் காத்திருக்கும் ஒரு புதிய தயாரிப்பு தான் நத்திங் போன் (1). இந்த போனை வாங்க வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நிறுவனத்தின் போனை வாங்குவதற்கு ‘Invite’ முறை கையாளப்படவுள்ளது. எனவே, அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே முதலில் போன் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. பயனர்களின் நலனுக்காவே இந்த முடிவை நிறுவனம் எடுத்துள்ளது.

Telegram Premium: கூடுதல் அம்சங்கள் வேண்டுமா; பணத்த கட்டு – ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்ட டெலிகிராம்!

இன்வைட் முறையில் விற்பனை

ஏன் தெரியுமா? பெரும்பாலான பயனர்கள் முதல் முறையிலே போனை வாங்கி விட வேண்டும் என்று பதிவு தளத்தை நாடி செல்வர். ஆனால், ஸ்டாக் இல்லை என்ற பதில் தான் பலருக்கு கிடைக்கும். இப்படியான சூழலை குறைக்கவே நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த முறை ஒன்றும் புதிதல்ல. ஒன்பிளஸ் முதல் போனுக்கும் இதே முறை தான் கடைபிடிக்கப்பட்டது. அதையே நத்திங்கும் பின்பற்றுகிறது. இதன் நிறுவனம் கார்ல் பெய், ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவர் என்பது இந்த நேரத்தில் நினைவுக்கூரத்தக்கது.

Nothing Phone (1): லைட் எல்லாம் மின்னுது… வெளியான நத்திங் போனின் வீடியோ!

இப்படி செய்வதனால், பல நன்மைகள் நிறுவனத்திற்கு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்தை தடுக்க முடியும். மேலும், புதிய நத்திங் போன் (1) மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த முடியும். நிறுவனத்திற்கு இந்த முறை சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

நத்திங் போன் ஏலம்

நத்திங் போன் (1) 100 ஸ்மார்ட்போன்களை StockX மூலம் ஏலத்தில் விட்டது. இதில் போனிற்கு $2,679 டாலர்கள் உச்ச ஏலத் தொகையாகக் கோரப்பட்டது. இது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்தும் 9ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. டெலிவரிக்கு 35 நாள்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

Vikram Movie: விக்ரம் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா; எந்த காட்சினு தெரியுமா?

நத்திங் போன் (1) சிறப்பம்சங்கள் – Nothing Phone (1) Specs

நத்திங் போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட OLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்படும். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான NothingOS நிறுவப்பட்டிருக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 5ஜி புராசஸர் கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பக்கம் ஒளிரும் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

POCO F4 5G: ஜூன் 23 அறிமுகமாகும் போக்கோ எஃப்4 5ஜி போன்; இதுவரை கிடைத்த தகவல்கள்…

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், OIS கேமராவுடன் முதன்மை சென்சார், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 4,500mAh பேட்டரி உடன் இந்த போன் வருகிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இதன் விலை ரூ.35,000 முதல் 45,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.