பொதுக் குழுவில் ஓ.பி.எஸ் பெயரை தவிர்த்த சீனியர்கள்: அடுத்த முதல்வர் எடப்பாடி என வேலுமணி பேச்சு

அனைத்து தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிமுகவின் ஒற்றை தலைமைகக்கான தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும், அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வார காரணமாக ஒற்றை தலைமை யார் என்பது தொடர்பான விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த பரபரப்புக்கு இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் முடிவு கிடைத்துள்ளது. கட்சியில் ஒற்றை தலைமை கொண்டுவந்தால் யாருடைய தலைமையில் கட்சி இயங்கும் என்பது குறித்து ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இதில் கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் நின்றதால். அவருக்கே பொதுச்செயலாளராக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில், இந்த பரபப்பான சூழலில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கிட்டத்தட்ட அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

கூச்சல் குழப்பம் மற்றும சலசலப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்ட்த்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக மககளின் இதயங்களில் நிரந்தரமாய் குடிகொண்ட தெய்வமாய் உள்ள எம்ஜிஆர் உரவாக்கிய அதிமுகவை ஒன்றரை கோடி தொண்டர்களின் கழகமாக மாற்றினார் ஜெயலலிதா. தற்போது நடைபெற்று வரும் இந்த பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் எழுச்சியாக மாறியுள்ளது.

எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை கொடுக்கும் நபராக கடந்த 9 நாட்களாக மக்களின் மனதில் ஒருமித்த தேர்வாக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இன்ற வரும் வழியெல்லாம் இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியை கட்டிக்காத்து எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியை வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது தமிழக மக்களின் விடிவெள்ளியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, வாழும் காலத்தில் வரலாறு படைக்கும் நபராக உள்ளார். இநத கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய எழுச்சிதான் திமுக ஆட்சிக்கான சாவு மணியாக இருக்கும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முல்வராக ஆவார்.

அனைத்து தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிதான் அவர் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பொதுக்குழுவில பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் ஒபிஎஸ் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்தது அனைவரையுமம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜூலை 11-ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.