”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” – ஆ.ராசா!
தங்களை தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள் என்று திமுக எம்பி ஆ.ராசா பேசியுள்ளார்.
நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டை மேட்டில் திமுக சார்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதில், நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
image
இந்த மாநாட்டில், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் மக்களவை உறுப்பினர் ஆ. இராசா, திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் திருச்சி சிவா, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப. வீரபாண்டியன், பெண்களின் கையில் அதிகாரம் – என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா ஆகியோர் அந்தந்த தலைப்புகளில் உரையாற்றினர். மக்களோடு நில் மக்களோடு வாழ் என்ற தலைப்பில் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றினார்.
image
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, “’பிரிவினை வேண்டும், தனித்தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன் வாருங்கள். பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி தீர்வு’ என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதில் இருந்து விலகி, ஜனநாயகத்திற்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
அமித்ஷாவுக்கு சொல்கிறேன், பிரதமருக்கு சொல்கிறேன். உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று பேசினார்.
'அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்'
'தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,
மாநில சுயாட்சி தாருங்கள்'
'அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்' https://t.co/gFDZoOSrn7 pic.twitter.com/BEapnK60Rq
— A RAJA (@dmk_raja) July 3, 2022
Leave a Comment
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.