திருச்சியில் மீண்டும் சைக்கிள் ரிக்‌ஷா… விழிப்புணர்வை உருவாக்க வினோத போட்டி!

க. சண்முகவடிவேல், திருச்சி

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் பிரபலமான சைக்கிள் ரிக்‌ஷா சில பயணிகளை ஏற்றி அவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விதமாக அறிமுகப் படுத்தப்பட்டது. காலப் போக்கில் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் பெருக்கத்தினால் சைக்கிள் ரிக்‌ஷா தொழில் மிகவும் தமிழகத்தில் பின்னுக்கு தள்ளி அழிந்து வரும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், சைக்கிள் ரிக்‌ஷா பிரபல வெளிநாடுகளில் பலவித மாடல்களில் தனித்துவ கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
ஆனால், தமிழகத்தில் சைக்கிள் ரிக்‌ஷா தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைக்கிள் ரிக்‌ஷா வெளிநாடுகளில் உள்ளது போல் நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என இளைஞர்களும் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுவதே தொழிலாக கொண்ட நபர்களும் விரும்புகின்றனர். இந்நிலையில் சைக்கிள் ரிக்‌ஷாவுக்கான முன்னோட்ட போட்டியாக திருச்சி கல்லுக்குழி மைதானத்தில் சைக்கிள் ரிக்‌ஷா போட்டி நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ரிசர்ச் தலைவர் சிஜின் கூறியதாவது: நான்கு சக்கர வாகன பந்தயம் போல் ரிக்‌ஷா பந்தயம் இந்தியாவில் கொண்டு வர நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

இதற்கு காரணம் என்னவென்றால் தற்போது உபயோகிக்கக்கூடிய ரிக்‌ஷாக்கள் 20,30 வருடங்களுக்கு முன்பு உபயோகப்படுத்திய பட்ட ரிக்‌ஷாக்கள் ஆகும்.
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் உலக அளவில் பார்க்கும் போது பலவித புதுவிதம் கூடிய ரிக்‌ஷாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் இளைஞர்களுக்காக ரிக்‌ஷாக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர்கள் மட்டுமே ரிக்‌ஷாக்களை இயக்கி வருகின்றனர். இந்தியாவில் ரிக்‌ஷாக்கள் தயாரிக்கும் நிறுவனமும் மூடப்பட்டு வருகிறது. ஜீரோ சதவீத கார்பன் புகையில்லாத வாகனங்கள் கூடிய ஒரு விளையாட்டினை இந்திய இளைஞர்களுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ரிக்‌ஷாவால் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் எனவும் இந்த போட்டியினை அறிமுகப்படுத்தி உள்ளோம் எனத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.