UFO: பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதா? பறக்கும் தட்டு எழுப்பும் கேள்விகள்

நாம் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா? வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையா? பறக்கும் தட்டுகளில் வருவது யார்? வேற்று கிரகவாசிகள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனரா?

அசாதாரணமான வான்வழி நிகழ்வுகளின் வினோதமான மற்றும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட காட்சிகள் தொடர்பான நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன.  அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்களை (unidentified flying objects) பார்த்ததாக பல தசாப்தங்களாக மக்கள் கூறிவருகின்றனர். 

ஆனால் இதுபோன்ற கூற்றுகளை கண்டித்து, இவை அனைத்தும் காட்சிகளை புரளிகள் இட்டுகட்டியவை என்றும் சிலர் சொல்கின்றனர்.

மேலும் படிக்க | 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்

வேற்றுகிரகவாசிகளும் பறக்கும் தட்டுகளும் உண்மையா இல்லை இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதைகளா? கடந்த 20 ஆண்டுகளில் வானத்தில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு (2022, மே மாதம்) அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த, அரை நூற்றாண்டுகளாகவே பறக்கும் தட்டுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக UFO தொடர்பான முதல் பொது விசாரணையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கடந்த மாதம் அதாவது, ஜூன் 2022 இல், நாசா ஒரு புதிய ஆய்வை அறிவித்தது. இந்த ஆய்வுத் திட்டத்தின்கீழ், அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகளை ஆய்வு செய்ய முன்னணி விஞ்ஞானிகளை நியமிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | ஏலியன்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலா… அரசுடன் கைகோர்க்கும் NASA

சுமார் ஒன்பது மாதங்கள் நீடிக்கும் இந்த ஆய்வின் மூலம் கிடைக்கக்கூடிய தரவுகள், எதிர்காலத்தில் கூடுதல் தரவை எவ்வாறு சேகரிப்பது, பறக்கும் தட்டுகளை அடையாளம் காண்பது மற்றும் விஞ்ஞான புரிதலில் பறக்கும் தட்டு தொடர்பான அணுகுமுறையை நகர்த்துவது எப்படி போன்ற பலவற்றுக்கு உதவியாக இருக்கும்.  

நீல வானத்திற்கு அப்பால் இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியாது. நமக்குத் தெரியாத அல்லது தெரியப்படுத்தப்படாத UFO காட்சிகள் பற்றிய சில பிரபலமான விஷயங்களை தெரிந்துக் கொள்வோம்.  

1947, கென்னத் அர்னால்ட் யுஎஃப்ஒ 
ஜூன் 24 அன்று, விமானி கென்னத் அர்னால்ட், UFOவை பார்த்ததாக தெரிவித்தார். இதுதான், பொதுவாக அமெரிக்காவில் பரவலாக அறிவிக்கப்பட்ட முதல் UFO பற்றிய தகவல் என்று கருதப்படுகிறது. புகழ்பெற்ற கென்னத் அர்னால்ட் UFOவை பார்த்தது 1947ம் ஆண்டில் நிகழ்ந்தது.

மேலும் படிக்க | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்

1957, லெவல்லேண்ட் 
டெக்சாஸின் லெவல்லேண்ட் என்ற சிறிய நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஒரு யுஎஃப்ஒ பறந்ததாக மக்கள் கூறினார்கள். ஒளிரும், முட்டை வடிவிலான பொருளை எதிர்கொண்டபோது, ​​தங்கள் இயந்திரங்கள் தானாகவே நின்றுவிட்டதாகக் கூறினர். பொருள் கடந்த பிறகு தங்கள் வாகனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

1947, ரோஸ்வெல் சம்பவம்
ரோஸ்வெல் ஆர்மி ஏர் ஃபீல்டில் இருந்து யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி ஏர் ஃபீல்ட் அதிகாரிகள் 1947 ஆம் ஆண்டு நியூ மெக்ஸிகோவின் ஒரு பண்ணையில் இருந்து பலூன் குப்பைகளை மீட்டனர். பல தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த குப்பைகள் பறக்கும் தட்டு தொடபானவை என்றும் அமெரிக்க அரசாங்கம் உண்மையை மூடிமறைத்ததாகவும் கூறப்பட்டது.  

1997, பீனிக்ஸ் விளக்குகள்
அரிசோனாவின் வானத்தில் V வடிவ தோற்றத்தை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து பீதியடைந்தனர். 

1989-90, பெல்ஜியம் பறக்கும் தட்டு
1989 முதல் 1990 வரை, ஐந்து மாதங்களில், சுமார் 13,500 பேர் பெரிய, அமைதியான, தாழ்வாகப் பறக்கும் கருப்பு முக்கோணங்களைக் கண்டதாகக் கூறினர். மேலும் 2,600 பேர் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வ அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக பெல்ஜியத்தின் இராணுவம் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவை ஹெலிகாப்டர்கள் அல்லது மயோனைஸுடன் சில்லுகளை சாப்பிடுவதால் ஏற்படும் மாயை (mass delusions caused by eating chips with mayonnaise) என்று கூறினார்.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகளின் ரீஎண்ட்ரீ? சவுத்தாம்ப்டன் குண்டுவெடிப்பு எழுப்பும் கேள்விகள்

இரண்டாம் உலகப் போரின் போது, ​​நேச நாட்டு விமான பைலட்டுகள் தாங்கள் சிறிய உலோகக் கோளங்களையும், வண்ணமயமான ஒளி பந்துகளையும் அடிக்கடி கண்டதாகக் கூறினர்.

இரண்டாம் உலகப் போரின் போது இதுபோன்ற அசாதாரணமான வான்வழி நிகழ்வுகள் அவ்வப்போது குண்டுவீச்சுக் குழுவினரால் புகைப்படம் எடுக்கப்பட்டன. 

பேய் ராக்கெட்டுகள்
பேய் ராக்கெட்டுகள் (ghost rockets) என்று அழைக்கப்படுபவை பெரும்பாலும் ஸ்காண்டிநேவியாவில் காணப்பட்டன, வேற்று கிரகங்களிலிருந்து வரும் உயிரினங்கள் வேறு சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்பட்டன. ஸ்காண்டிநேவியாவில் பல யுஎஃப்ஒ பார்வைகள் குறித்து ஸ்வீடிஷ் பாதுகாப்புப் பணியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

பேய் ராக்கெட்டுகள் 1946 இல் ராக்கெட்/ஏவுகணை வடிவிலான யுஎஃப்ஒக்கள் என்று அறியப்பட்டன.  

1966 ஆம் ஆண்டில், நூற்றுக்கணக்கான மக்கள் யுஎஃப்ஒவைப் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மெல்போர்ன் பள்ளிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பறக்கும் தட்டு, வயலில் இறங்குவதைக் கண்டனர். அந்தப் பொருளை பின்னர் உள்ளூர் புறநகர்ப் பகுதியில் கண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

UFOகளின் வரத்து அதிகரிப்பதாக பென்டகன் கூறுகிறது

இது ஏப்ரல் 2020 இல் பெறப்பட்ட ஸ்கிரீன் கிராப் ஆகும். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் இந்த புகப்படம், இது கடற்படை விமானிகள் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகளுடன் தொடர்புகளைக் காட்டும் வகைப்படுத்தப்படாத வீடியோவின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.

“2000 களின் முற்பகுதியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சிப் பகுதிகள் மற்றும் பயிற்சி வரம்புகள் மற்றும் பிற நியமிக்கப்பட்ட வான்வெளிகளில் அங்கீகரிக்கப்படாத மற்றும்/அல்லது அடையாளம் காணப்படாத விமானங்கள் அல்லது பொருள்கள் அதிகரித்து வருவதை நாங்கள் கண்டுள்ளோம்” என்று கடற்படை உளவுத்துறையின் துணை இயக்குநர் ஸ்காட் பிரே 222 மே மாதம் தெரிவித்தார்.  

மேலும் படிக்க | அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.