இன்ஸ்டன்ட் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருங்க?

இந்தியாவில் உடனடி ஆப் மூலம் கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த ஆப் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு அதிகளவிலான வட்டி விகிதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்தான ஆய்வில் குறைந்தபட்சம் 58% இந்தியர்கள், 25% மேலாக வட்டி செலுத்துவதாக ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.

உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களில் சென்னைக்கு எந்த இடம் தெரியுமா.. பெங்களூரை விட பெட்டர்.. ஏன்?

25% மேலாக வட்டி

25% மேலாக வட்டி

இது குறித்தான ஆய்வானது 409 மாவட்டங்களில் 27,500 சிட்டிசன்களிடம் நடத்தப்பட்டது. பதிலளித்தவர்களில் 14% பேர் உடனடி கடன் ஆப்களை பயன்படுத்தியவர்கள். இவர்களில் 58% பேர் தாங்கள் அல்லது தங்கள் வீட்டில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவர், உடனடியாக கடன் வழங்கும் ஆப்களை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இவர்கள் 25% அதிகமாக வட்டி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

டேட்டா தவறாக பயன்பாடு

டேட்டா தவறாக பயன்பாடு

அதேபோல இந்த ஆய்வில் பதிலளித்துள்ளவர்களில் 54% பேர் தாங்கள் அல்லது குடும்பத்தினரில் ஒருவரிடம் மிரட்டி பணம் பறிக்கப்பட்டிள்ளதாகவும், அவர்களின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

60% வரை வட்டி விகிதம்
 

60% வரை வட்டி விகிதம்

வாடிக்கையாளர்களின் கருத்துப்படி, இன்ஸ்டன்ட் லோன் ஆப் மூலமாக 3000 – 5000 கடனுக்கு 30 – 60% வட்டி விகிதத்தினை வசூலிக்கின்றன. உங்களின் கடன் தொகை மற்றும் கடனை திரும்ப செலுத்தும் காலத்தின் அடிப்படையில் வட்டி விகிதங்கள் மாறும்படும்.

தொற்று நோய் காலத்தில் வட்டி உச்சம்

தொற்று நோய் காலத்தில் வட்டி உச்சம்

தொற்று உச்சத்தின் போது சில தளங்கள் 400 – 500% வட்டி விகிதனை வசூலித்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜூன் 9 அன்று ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஐ டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை விரைவில் வெளியிடும் என்று கூறியிருந்தார். அவற்றில் பல அங்கீகரிக்கப்படாதவை மற்றும் சட்ட விரோதமானவை .

பதிவு இல்லை

பதிவு இல்லை

சமீப காலமாக டிஜிட்டல் லெண்டிங் செயலிகளின் ஆப்ரேட்டர்கள் சிலரின் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

ஆப் டிஜிட்டல் வழியாக கடன் வழங்கும் பல நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படவில்லை. இவை தாங்களாகவே இயக்கப்படுகின்றன என்று ஆளூநர் மக்களை எச்சரித்தார்.

அதிகளவிலான புகார்கள்

அதிகளவிலான புகார்கள்

மேலும் இந்த கடன் வழங்கும் ஆப்களுக்கு எதிராக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த புகார்களுக்கு எதிரான மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தமிழ் நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் ரிசர்வ் வங்கி தரவு கூறுகின்றது.

கூகுளுக்கு கடிதம்?

கூகுளுக்கு கடிதம்?

இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியில் மகாராஷ்டிரா போலிஸ் சைபர் கிரைம் குழுவானது, வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை கொடுத்த 69 கடன் ஆப்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றுமாறு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Instant loan apps charged over 25% interest rate from 58% indians

Instant loan apps charged over 25% interest rate from 58% indians/இன்ஸ்டன்ட் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருங்க?

Story first published: Tuesday, July 5, 2022, 20:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.