தேசிய நெடுஞ்சாலையில் காரை வேகமாக துரத்திச்சென்ற காட்டு யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று காரை வேகமாக துரத்திச்சென்ற காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் நோக்கி காரில் 5 பேர் சென்று கொண்டிருந்தனர். தமிழக – கர்நாடகா எல்லையில் உள்ள புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக அவர்கள் சென்ற போது சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதிக்குள்ளிருந்து வேகமாக ஓடி வந்து காரை துரத்தத்தொடங்கியது.

சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரை பின்னோக்கி வேகமாக இயக்கியதையடுத்து யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.