பிரபல பாடகரை கொன்றுவிட்டு கையில் துப்பாக்கிகளுடன் கொண்டாட்டம்! வெளியான அதிர்ச்சி வீடியோ


இந்திய மாநிலம் பஞ்சாப்பில் பாடகர் சித்து மூசே வாலாவை கொலை செய்த நபர்கள், கையில் துப்பாக்கிகளுடன் அதனை கொண்டாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மதம் 21ஆம் திகதி பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூசே வாலா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சொந்த ஊரான மானஸாவில் அவருக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர், கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான அங்கித் சிர்ஸா, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பல்வேறு ரக துப்பாக்கிகளை பொலிசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் சித்துவை கொலை செய்த பிறகு, குற்றவாளிகள் நான்கு பேரும் காரில் பயணித்துள்ளனர். அப்போது கையில் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு ஏதோ சாதித்தது போல அவர்கள் கொண்டாடியுள்ளனர்.

இந்த வீடியோ கைது செய்யப்பட்ட ப்ரியாவத், கபில், சச்சின் பிவானி, தீபக் ஆகியோரின் செல்போனில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. துப்பாக்கி கலாச்சாரம் சர்வ சாதாரணமாக பரவி வருவதாக பலர் வேதனை தெரிவித்துள்ளனர். 

Sidhu Moose Wala

Sidhu Moose WalaSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.