Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
தேர்வில் சாதி குறித்து கேள்வி.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம்பெற்ற விவகாரத்தில், பல்கலை. துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வரலாற்றுத்துறை தலைவர் ஆகியோருக்கு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி டீசர் வெளியீடு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள செஸ் ஒலிம்பியாட் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2,000 த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஓ.பி.எஸூ.க்கு கொரோனா பாதிப்பு
ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையை விட்டு வெளியேற தடை
ஜூலை 28ம் தேதி வரை மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே, நீதிமன்ற அனுமதி இல்லாமல் இலங்கையை விட்டு வெளியேற இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தங்கர், மேற்கு வங்க ஆளுநராக இருந்து வருகிறார்
சென்னை கலைவாணர் அரங்கில் வருகின்ற ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். கொரோனா தொற்றிலிருந்து முதல்வர் குணமடைந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு பிறகான அவரது முதல் நிகழ்ச்சியாக இது இருக்கும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்கின்ற பகுதிகளில் அமைந்துள்ள 2000 கோயில்களின் பணிகளுக்கு விரைவில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். 1000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணி செய்ய ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி மரணத்திற்கான காரணத்தை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் கொலையாளியை கைது செய்யக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்தன. மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு புதிய பேருந்து போக்குவரத்தை தொடங்கிவைத்த அமைச்சர் துரைமுருகன், “அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து காணப்படுகிறது. அரசு மணல் குவாரி தொடங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து அதிமுக சீல் வைப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “எங்களுக்கு இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி), ஓபிஎஸ் (ஓ. பன்னீர் செல்வம்) ஆகியோர் ஒன்றுதான். இருவரின் தயவும் தேவையில்லை” என்றார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அட்டவணை,உள்ளிட்ட முழுமையான விவரங்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளி வராததால் மேலும் கால அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 28-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில், செஸ ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக சென்னை நேப்பியர் பாலம் செஸ் போர்ட் தீம்’ல் அமைக்கபட்டுள்ளது!
சொத்து தகராறில் சொந்த சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை கத்தியால் வெட்டிய அரிகிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.
வெட்டுக் காயம் பட்ட அரிகிருஷ்ணனின் சகோதரி ராஜ சுலோச்சனா மற்றும் அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள், இருவரும் விழுப்புரம் அருகேயுள்ள ஆயந்தூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அதிமுகவில் இருந்து மேலும் இரண்டு பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இவர்கள் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அமலன் பி சாம்ராஜ் மற்றும் மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் ஆகியோர் ஆவார்கள்.
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தென்காசி உள்ளிட்ட மலை மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதிவரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை காந்திபுரம் மத்திய சிறைசாலை மைதானத்தில் நடைபெற்ற அரசு பொருள்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் காளிமுத்து, துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்;. கடன் தொல்லையால் காவலர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
கன்னியாகுமரி நித்திரவிளை அருகேயுள்ள நம்பாளிசாலை ஆற்றுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட மதுரை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வு, அரசு டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லை எனக் கூறி டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட மறுத்துவிட்டனர்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசாணையை எதிர்த்து தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு இன்னும் அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட சாதி குறித்தான கேள்வி கண்டனத்திற்குரியது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும் கல்வியாளர்கள் மத்தியில் இப்படி ஒரு சிந்தனை இருப்பது பிற்போக்கு தனமானது. பெரியாரின் சிந்தனைக்கு எதிரானது என்று அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் உடனான தனிப்பட்ட நட்பு தொடர்கிறது. எங்களுக்கும், திமுகவிற்கும் இடையே தனிப்பட்ட பகையில்லை. தவறுகளை மக்களிடம் கொண்டு செல்கிறோம். ஜிஎஸ்டி பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து மத்திய அமைச்சருடன் பேசி வருகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அரியலூரில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்பும் கருவுற்றதால் ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.30,000ல் இருந்து ரூ,60,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்துவிட்டால், வழங்கப்படும் இழப்பீடு ரூ. 4 லட்சமாக உயர்வு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, “சேலம் மாவட்டம் மக்களின் பேராதரவுடன், திமுகவின் கோட்டையாகத் திகழ்வதை மறந்துவிட வேண்டாம். அன்பு எனும் கோட்டை கட்டி மக்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் திமுக கோட்டைதான். கோட்டை பற்றி இனி கனவுகூட காண வேண்டாம்: உங்களை மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சி அதிகாரத்திற்கான தெருச்சண்டையை மறைக்க திமுக மீது பாய்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் 5 முனை போட்டி நிலவி வருகிறது. ஒருபுறம் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டி போடும் நிலையில், மறுபுறம், முன்னாள் அமைச்சர்கள் அநுரயாப்பா அபேவர்தன, டலஸ் அழகப்பெரும, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் மாணவி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கணேசன், மாணவி மரண வழக்கில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் சயனா கவாகாமியை 21-15, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேற்றியுள்ளார்.
சென்னை, அடையாற்றில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல்லில் அரிசி ஆலை மற்றும் நவதானிய வர்த்தக சங்கத்தினர் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர். அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் மீதான 5% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் 19ம் தேதி மீண்டும் கூடும். அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஓரிரு நாளில் முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு பதிவாகவில்லை. குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுகிறது என சென்னை, விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
88 ஆண்டுகால வரலாற்றில், மேட்டூர் அணை 42வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், சென்னை, தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,044 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவில் இருந்து 18,301 பேர் குணமடைந்துள்ளனர். 1.40 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் நீர் வெளியேற்றம் 1,18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மறைந்த இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடலுக்கு இன்று, சென்னை, கீழ்ப்பாக்கம் வேலங்காடு மயானத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியை எட்டியது . இன்னும் சிறிது நேரத்தில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 1,00,000 கன அடி வரை எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்துவிடப்படலாம் என்பதால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1,25,000 கன அடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.17 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.39 அடியாக உள்ளது. நீர் இருப்பு – 90.92 டிஎம்சி, அணையிலிருந்து 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
குரங்கு அம்மை நோயால் குழந்தைகளுக்கு மரணம் ஏற்படலாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, கேரளாவில் 5 மாவட்டங்களில் உஷார் நிலை பிரகடனப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில், விதிகளை மீறி செயல்பட்ட சேலம், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஜலான் மாவட்டத்தில் புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம் செல்கிறார்.