சதுரங்க வேட்டை 2 : அக்டோபர் 7ல் திரைக்கு வருகிறது

கடந்த 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கினார் எச். வினோத். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதையடுத்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. நிர்மல் குமார் என்பவர் இயக்கிய அந்த படத்திற்கு எச்.வினோத் கதை வசனம் எழுதியிருந்தார். அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்தனர் . இந்த படம் சில பல காரணங்களால் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இந்த நிலையில் தற்போது சதுரங்க வேட்டை -2 படத்தை அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சதுரங்க வேட்டை -2 படம் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திரைக்கு வரப்போகிறது. இந்த படத்தை நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.