கனடாவில் இந்திய வம்சாவளியினர் இருவர் சுட்டுக்கொலை: இரு குழுக்களுக்கிடையே மோதல்…கனடாவில் இரு குழுக்களுக்கிடையிலான சண்டையில் இந்திய வம்சாவளியினர் இருவர் கொல்லப்பட்டார்கள்.

கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் Meninder Dhaliwal மற்றும் Satinder Gill என தெரியவந்துள்ளது.

வான்கூவருக்கருகிலுள்ள Whistler என்ற இடத்தில் அமைந்துள்ள Sundial என்னும் உணவகத்துக்கு அருகே இரு குழுக்கள் மோதிக்கொண்டதில் இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். Meninderஇன் நண்பரான Gill எந்த குழுவையும் சேர்ந்தவரில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட Meninder சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, Gill மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கும் சமீபத்தில் விமானத்தில் வெடிகுண்டு வெடித்து 329 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய Ripudaman Singh Malik என்பவர் கொல்லப்பட்டதற்கும் தொடர்புள்ளதா என தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் Meninderஇன் சகோதரர் Harb Dhaliwal, சென்ற ஆண்டே கொல்லப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.