மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த கடலூர் கபடி வீரர்! பகீர் காட்சிகள்!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும் போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பெரியபுரங்கணி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மானடிக் குப்பத்தில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ளார். நேற்று இரவு போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, விமல் ராஜ் எதிரணியிடம் ரைட் சென்று திரும்பி எல்லைக்கோட்டை தொடும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
image
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பரகளும் போட்டி நடுவரும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது அவரது உடல் தற்போது விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
image
இது குறித்து அவரது தந்தை செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது விமல்ராஜ் கபடி போட்டியின் போது எதிரணியிடம் ரைட் போய் திரும்பி வரும்போது மயங்கி விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.