ஹேக் செய்யப்பட்ட 54 லட்சம் ட்விட்டர் பயனர்களின் தரவுகள்; ரூ.24 லட்சத்துக்கு விற்பனை?

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தின் 54 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விலை ரூ.24 லட்சம் எனவும் ஹேக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். மாதந்தோறும் சுமார் 330 மில்லியன் பயனர்கள் இதனை ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர். பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை பலரும் பரஸ்பரம் பதிவுகளை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது ட்விட்டர். 280 கேரக்டர்களில் (டெக்ஸ்ட்) பதிவுகளை இதில் பகிரலாம்.

இந்நிலையில், ட்விட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வரும் சுமார் 54 லட்சம் பயனர்களின் தரவுகளை தொழில்நுட்பத்தின் துணைகொண்டு களவாடிய ஹேக்கர், அதனை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 24 லட்சமாம்.

இது தொடர்பாக அந்த ஹேக்கர் ‘Breach Forums’ என்ற தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். பயனர்கள் தரவுகள் அடங்கிய டேட்டா பேஸ் சாம்பிளை (Sample) அதில் அப்லோட் செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதில் வழக்கமாக டிஸ்ப்ளே ஆகும் ட்விட்டர் பயனர்களின் ப்ரொஃபைல் விவரம் இருப்பதாகவும். அதோடு சம்பந்தப்பட்ட பயனரின் கணக்கை லாக்-இன் செய்ய பயன்படுத்தும் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த 54 லட்சம் பயனர்களில் பிரபலங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் சொல்லி வருகின்றனர். இது மாதிரியான விஷமச் செயல்கள்தான் தொழில்நுட்பம் சமயங்களில் ஒருவிதமான சங்கடத்தை கொடுக்கும் சாபமோ என்ற எண்ணத்தை கொண்டு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.