அங்க விமர்சனம்…. இங்க வரவேற்பு… லெஜெண்ட் சரவணன் 3 நாளில் செய்த சாதனை

தனது கடை விளம்பரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தனது கடை விளம்பரத்தில் முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடனமாடி விளம்பரத்தை ஹிட்டாக்கிய அருள் சரவணன், சினோ முதல் ஹன்சிகா வரை அனைவருடனும் இணைந்து விளம்பத்தில் ஆட்டம் போட்டுள்ளார். .

தனது கடை விளம்பரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய அருள் சரவணன் தற்போது சினிமாவில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். இந்த முயற்சியில் அஜித் விக்ரம் நடிப்பில் உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார்

தானே தயாரித்து ஹீரோவாக நடிக்கும் அருள் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி என்ற பாலிவுட் நடிகை நடித்துள்ளார். மேலும் பிரபு, விஜயகுமார், நாசர், யோகிபாபு,விவேக், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தி லெஜெண்ட் படம் வரும் ஜூலை 28-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை பிரபல சினிமா விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்த படத்திற்காக தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதன் மூலம் முதல் படத்திலேயே லெஜெண்ட் சரவணா முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைய பெரிய வாய்ப்புள்ளது. அதேபோல்’ லெஜெண்ட் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.

இதன் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகாரித்து வரும் நிலையில். படம் தொடர்பான செய்திகள் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்த மறுபுறம் அருள் சரவணனின் ட்விட்டர் பக்கம் பெரும் வைரலாக பரவி வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் இணைந்த அருள் சரவணனுக்கு தற்போது 13 லட்சத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். படம் வெளியாகி ஹிட்டடிக்கும் பட்சத்தில் அவரின் சமூக வலைதள ஃபாலோயர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்பர்புள்ளது. படத்தின் டீசர் டிரெய்லர் வெளியானபோது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாடும் லெஜெண்ட் சரவணாவுக்கு ட்விட்டரில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.