இரண்டு மாதங்களில் 2-வது லொட்டரி ஜாக்பாட்டை வென்ற அதிர்ஷடசாலி பெண்!


அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் லொட்டரியில் 1 லட்சம் டொலர் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி பெண்ணுக்கு இப்போது இரண்டாவது முறையாக ஜாக்பாட்டை அடித்துள்ளது.

இரண்டு மாதங்களில் இரண்டு முறை $100,000 லொட்டரி பரிசுகளை வென்ற அப்பெண்ணால், தான் இவ்வளவு அதிர்ஷடசாலி என நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் Gold Coast நகரத்தில் Nerang புறநகரத்தைச் சேர்ந்த அப்பெண், 25 ஜூலை 2022 திங்கட்கிழமை வரையப்பட்ட லக்கி லாட்டரி சூப்பர் ஜாக்பாட் டிரா 10623-ல் $100,000 உத்தரவாதமான முதல் பரிசை வென்றார்.

அவர் ஏற்கெனெவே ஜூன் மாதத்தில் இதே பரிசுத்தொகையை லாட்டரியில் வென்றார் என அவுஸ்திரேலிய லொட்டரி நிறுவனமான The Lott தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களில் 2-வது லொட்டரி ஜாக்பாட்டை வென்ற அதிர்ஷடசாலி பெண்! | Lucky Australian Woman Wins2nd Lottery Jackpot

பெயர் குறிப்பிடப்படாத அப்பெண், இது குறித்து பேசுகையில், “இது போன்ற விடயங்கள் எனக்கு நடக்காது, நான் தற்செயலாக லொட்டரி சீட்டுகளை வாங்குகிறேன், அதனால் தான் நான் அதிர்ச்சியடைந்தேன். என்ன செய்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. கடைசியாக நான் வெற்றி பெற்றபோது, ​​அதையெல்லாம் சேமிப்பாகச் சேர்த்தேன், அது மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது” என்று கூறினார்.

இப்போது இரண்டாவது முறையாக வென்றதை நம்பமுடியவில்லை என கூறிய அவர், ஒரு புதிய காரை வாங்கி கொண்டாட ஆசைப்படுவதாக கூறினார்.

 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.