இரவில் தரையிறங்கும் வசதி இல்லாத 25 இந்திய விமான நிலையங்கள்… முழு லிஸ்ட்!

இந்தியாவில் பெரும்பாலான விமானநிலையம் இரவில் தரையிறங்கும் வசதியை பெற்று இருந்தாலும் ஒருசில விமான நிலையங்களில் இரவில் தரையிறங்கும் வசதி இல்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருசில விமான நிலையங்களில் இரவில் தரையிறங்கும் வசதி இப்போதைக்கு இல்லை என்றும் ஆனால் எதிர்காலத்தில் அந்த வசதி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரவு நேரத்தில் தரையிறங்க முடியாத விமான நிலையங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

விமான பயணிகள் லக்கேஜ் பேக் மிஸ் ஆகாமல் பயணம் செய்வது எப்படி?

தரையிறங்கும் வசதிகள் இல்லாத விமான நிலையங்கள்

தரையிறங்கும் வசதிகள் இல்லாத விமான நிலையங்கள்

இந்தியாவில் செயல்படும் 25 விமான நிலையங்களில் இரவு தரையிறங்கும் வசதிகள் இல்லை. குஷிநகர் விமான நிலையம், சிம்லா விமான நிலையம் மற்றும் ஜார்க்கண்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியோகர் விமான நிலையம் உள்பட 25 விமான நிலையங்களில் இரவில் தரையிறங்கும் வசதிகள் இல்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம்

இந்திய விமான நிலையங்கள் ஆணையம்

விமான நிலையங்களின் தரம் உயர்த்துதல் அல்லது நவீனமயமாக்கல், இரவு தரையிறங்கும் வசதி உள்ளிட்டவை ஒரு தொடர்ச்சியான செயல் என்றும், நிலம், வணிகம் ஆகியவற்றைப் பொறுத்து அவ்வப்போது இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) மற்றும் பிற விமான நிலைய ஆபரேட்டர்களால் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 25 விமான நிலையங்கள்
 

25 விமான நிலையங்கள்

தற்போது இரவு தரையிறங்கும் வசதி, விமானங்களின் செயல்பாட்டுத் தேவை மற்றும் நிலத்தின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முற்றிலும் தேவை மற்றும் திட்டமிடப்பட்ட விமான செயல்பாடுகளுடன் 25 செயல்பாட்டு விமான நிலையங்களில் இல்லை” என்று அமைச்சகம் கூறியது.

இரவு தரையிறங்கும் வசதி இல்லாத ஒருசில விமான நிலையங்களின் பட்டியல் இதோ:

குஷிநகர் விமான நிலையம் (உத்தர பிரதேசம்)

சிம்லா விமான நிலையம் (இமாச்சல பிரதேசம்)

தியோகர் விமான நிலையம் (ஜார்கண்ட்)

குலு-மனாலி விமான நிலையம் (ஹிமாச்சல பிரதேசம்)

தர்மசாலா விமான நிலையம் (ஹிமாச்சல பிரதேசம்)

பிலாஸ்பூர் விமான நிலையம் (சத்தீஸ்கர்)

ஜக்தல்பூர் (சத்தீஸ்கர்)

கலபுர்கி (கர்நாடகா)

கோலாப்பூர் விமான நிலையம் (மகாராஷ்டிரா)

சிந்துதுர்க் விமான நிலையம் (மகாராஷ்டிரா)

லூதியானா (பஞ்சாப்)

கோலாப்பூர் விமான நிலையம்

கோலாப்பூர் விமான நிலையம்

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமீபத்தில் கோலாப்பூர் விமான நிலையத்தில் இரவு தரையிறங்கும் வசதியை நிறுவியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) குழு கோலாப்பூர் விமான நிலையத்தை ஆய்வு செய்தது. ஆய்வின் போது டிஜிசிஏ மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த விமான நிலையம் இரவில் தரையிறங்கும் வசதியை பெற்றுள்ளது.

குறைந்த விமான பயணிகள்

குறைந்த விமான பயணிகள்

நாட்டில் 100 க்கும் மேற்பட்ட செயல்பாட்டு விமான நிலையங்கள் உள்ளன என்று கூறியுள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இரவில் தரையிறங்கும் வசதிகள் இல்லாத விமான நிலையங்கள் பெரும்பாலும் குறைந்த விமான பயணிகள் போக்குவரத்தை பதிவு செய்கின்றன என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதனால் பெரும் பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

அரசு ஆர்வம்

அரசு ஆர்வம்

இருப்பினும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் இரவில் தரையிறங்கும் வசதியை பெற்று இருக்கும் நிலையில் இந்த வசதி இல்லாத விமான நிலையங்களுக்கு இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதிகளை வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருவதாகவும், இந்த நடவடிக்கையில் அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These Airports in India Do Not Have Night Landing Facility.. FULL LIST

These Airports in India Do Not Have Night Landing Facility.. FULL LIST | இரவில் தரையிறங்கும் வசதி இல்லாத 25 இந்திய விமான நிலையங்கள்… முழு லிஸ்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.