தங்கம் விலையானது கடந்த வாரத்தில் ஏற்றம் கண்ட நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை.
சொல்லப்போனால் தற்போது சற்று அதிகரித்து இருந்தாலும், விலை மீண்டும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலையானது 1720 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகின்றது. எனினும் இன்றும் பெரியளவில் மாற்றமின்றியே காணப்படுகின்றது.
தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
இரவில் தரையிறங்கும் வசதி இல்லாத 25 இந்திய விமான நிலையங்கள்… முழு லிஸ்ட்!

ஏன் இந்த தடுமாற்றம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும், அது பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தொடர்ந்து வலுவாகவே இருந்து வந்த டாலரின் மதிப்பானது, தற்போது சற்று வலுவிழந்து காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் ஏற்றத்தினை வழிவகுத்துள்ளது. எனினும் வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆக இதனால் பெரியளவில் விலையில் மாற்றம் காணமல் காணப்படுகிறது.

வட்டி அதிகரிக்கலாம்
கட்டாயம் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரின் மதிப்பினை தூண்டியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது குறித்து முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

பெரியளவில் மாற்றமில்லை
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது 4வது அமர்வாக சற்று சரிவினையே கண்டு காணப்படுகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டாலும், வட்டி விகிதம் மீண்டும் அதிகரித்தால் தங்கம் விலை குறையாலமே என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைந்து, விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

விலை குறைந்த தங்கம்
எப்படியிருப்பினும் டாலரின் மதிப்பானது தற்போது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தங்கம் விலையினை மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை குறைந்ததாக மாற்றியுள்ளது. இது தங்கத்தினை வாங்கவும் தூண்டியுள்ளது.

ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவென்ன?
பல வருடங்களுக்கு பிறகு ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1721.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதேபோல வெள்ளி விலையும் சற்று அதிகரித்து, 18.413 டாலராக காணப்படுகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டுமே அதிகரித்திருந்தாலும், பெரியளவில் ஏற்றாம் காணவில்லை. ஆக இது மத்திய வங்கியின் முடிவை பொறுத்து பெரியளவில் மாற்றம் காணலாம்.

இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்?
இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சற்று அதிகரித்து, 50,601 ரூபாயாக காணப்படுகின்றது. இதே வெள்ளியின் விலையானது கிலோவுக்கு சற்று அதிகரித்து, 54,500 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை என இரண்டுமே சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 4720 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு, 5149 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,192 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,490 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 61.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 610 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு, 61,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.47,200
மும்பை – ரூ.46,900
டெல்லி – ரூ.46,900
பெங்களூர் – 46,950
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.47,200
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
gold price on 26th June 2022: Gold prices trade nearly in 1722 dollar per ounce
gold price on 26th June 2022: Gold prices trade nearly in 1722 dollar per ounce/தங்கம் விலையில் ஏன் இந்த தடுமாற்றம்.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?