போதையில் லாரி ஓட்டிய டிரைவருக்கு ஓனர் கொடுத்த பரிசு..! சட்டையை கிழித்து தர்ம அடி

கோவையில் இருந்து பல்லடம் நூற்பாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கை உரிய இடத்தில் கொண்டு சேர்க்காமல்,  மதுபோதையில் லாரியை நடுவழியில் நிறுத்தி சாலையோரம் படுத்து உறங்கிய ஓட்டுனரின் சட்டையை கிழித்து, லாரி சர்வீஸ் உரிமையாளர் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிக்கு முன்பாக ஒரு போதை ஆசாமியை ஒயிட் அண்ட் ஒயிட் ஆசாமி ஒருவர் சட்டையை பிடித்து கம்பால் அடித்துக் கொண்டிருந்தார்.

விசாரித்த போது அடித்தவர் அந்த லாரியின் உரிமையாளர் அங்குராஜ் என்றும் அடிவாங்கிய போதை ஆசாமி அந்த லாரியின் ஓட்டுனர் என்பதும் தெரியவந்தது

கோவையை சேர்ந்த ஸ்ரீ சக்திவேல் லாரி சர்வீஸ் உரிமையாளர் அங்குராஜ் என்பவர் பல்லடம் நூற்பாலைக்கு சரக்கு ஏற்றிச்செல்வதற்காக தனது லாரியை அனுப்பி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை கடந்தும்
லாரி நூற்பாலைக்கு சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது.

சரக்கு ஏற்றி அனுப்பி வைத்தவர், லாரி உரிமையாளரிடம் சண்டையிட்டதால், அவர் , தனது லாரி ஓட்டுனரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

அவர் செல்போனை எடுக்கவில்லை , இதையடுத்து ஜி.பி.எஸ் மூலம் லாரி எங்கு நிற்கிறது என்பதை கண்டறிந்து இங்கு வந்து பார்த்தால், சரக்கு லாரியின் ஓட்டுனர் டாஸ்மாக் சரக்கு ஏற்றிக் கொண்டதால் மல்லாந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பிய உரிமையாளர், ஓட்டுனரை கம்பால் விளாசி எடுத்தார்

ஒரு கட்டத்தில் பொருளோட மதிப்பு தெரியாமல் வீதியில் போதையை போட்டு வண்டி ஓட்டி சாலையில் மற்றவர்கள் மீது மோதினால் என்னாவது என்று ஆவேசமாகி ஓட்டுனரின் ஆடைகளை கிழித்து சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டினார்.

இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த பலரும் அவரிடம் ஓட்டுனர் செய்தது தவறு தான் அதற்காக ஆடைகளை கிழித்து அவமானப்படுத்துவது முறையல்ல என்று எடுத்து கூறிய போதும் சமாதானம் அடையவில்லை.

உடல் அலுப்பு காரணமாக மது அருந்திய ஓட்டுனர் , சாலை விதியை மதித்து வாகனம் ஓட்டாமல் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த நிலையில், அந்த ஓட்டுனரை ஆடைகளை கிழித்து தாக்குவது எந்த விதத்தில் நியாயம் ? என்றும் போலீசில் புகார் அளிப்பதை விடுத்து தாக்கியது தவறு ((SPL gfx out)) என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ள ஓட்டுனர்கள் , லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.