உலகின் மிக அரிய வகையானபிங்க் நிற வைரம் கண்டெடுப்பு| Dinamalar

லுவாண்டா:அங்கோலாவில், 170 காரட்டில் ‘லுலோ ரோஸ்’ எனப்படும், அரிய வகை ‘பிங்க்’ நிற வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்ரிக்க நாடான அங்கோலாவில், ஏராளமான வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு கிடைக்கும் வைரங்கள், சர்வதேச அளவில் மிகப் பெரும் தொகைக்கு விற்பனையாகின்றன. இந்நிலையில், அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில், அரிய வகை பிங்க் நிற வைரத்தை தொழிலாளர்கள் கண்டெடுத்தனர்.

இது குறித்து ‘லுகாபா டைமண்ட்’ நிறுவனம் கூறுகையில், ‘இந்த 170 காரட் வைரம், 300 ஆண்டு களுக்குப் பின் கிடைக்கப் பெற்ற அரிய வகை வைரம்’ என்றது. கடந்த, 2017ல் ஹாங்காங்கில் 59.6 காரட் பிங்க் நிற வைரம், 569 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதுவே, இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் விலை உயர்ந்தது. தற்போது கிடைக்கப் பெற்றுள்ள லுலோ ரோஸ் வைரம், இதை விட பல மடங்கு அதிகமாக ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.