உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ நிறுவனம், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 21% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து சரிவினைக் காணும் விதமாகவே அழுத்தத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் அதன் பணியாளர்களுக்கு (Employees stock option plan) பங்கு வழங்கல் திட்டம் திட்டத்தினை சோமேட்டோ அறிவித்துள்ளது.
இது குறித்து கடந்த செவ்வாய்கிழமையன்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் சோமேட்டோ தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு கடன். 4 அசத்தலான அரசின் கடன் திட்டங்கள்…

ஊழியர்களுக்கு பங்கு
தொடர்ந்து சோமேட்டோ பங்கானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், அதன் ஊழியர்காளுக்கு 4,65,51,600 பங்குகளை வழங்க நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய பங்கு விலை நிலவரப்படி, சுமார் 193 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் 41.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது.

லாக் இன் காலம் முடிவு
கடந்த வாரம் 613 கோடி பங்குகள் அல்லது 78% பங்கிற்கான லாக் இன் காலம் முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்கனவே அழுத்தத்தில் காணப்படுகிறது. இதனால் இன்னும் இப்பங்கினில் அழுத்தம் தொடரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர் சரிவு
தொடர்ந்து இப்பங்கின் விலையானது ஐபிஓ-வில் இருந்து சரிவிலேயே காணப்படும் நிலையில், இதன் சந்தை மதிப்பும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
முன்னதாக மணிக் கண்ட் ரோல் அறிக்கையில், 2022ம் நிதியாண்டின் பிற்பாதியில் சோமேட்டோ-வின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயலுக்கு வழங்கப்பட்ட ESOP காரணமாக நிறுவனத்திற்கு 387 கோடி ரூபாய் செலவாகியதாக கூறியது.

செலவு
மொத்தத்தில் சிஇஒ உள்பட பலருகும் வழங்கப்பட்ட பங்குகள் காரணமாக நிறுவனத்திற்கு 753 கோடி ரூபாய் செலவாகியதாக ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மே மாதம் 2022ம் நிதியாண்டில் தனது பங்குகள் மூலம் கிடைத்த வருமானத்தில் சுமார் 700 கோடியை சோமேட்டோ பியூச்சர் அறக்கட்டளைக்கு வழங்குவதாக தெரிவித்தூள்ளார். இந்த தொகையானது டெலிவரி பார்ட்னர்களின் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிபுணர்கள் விமர்சனம்
கடந்த ஆண்டு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட சோமேட்டோ, பேடிஎம், பாலிசிபஜார் போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ESOP கொள்கைகளை பற்றி பல நிபுணர்களும் விமர்ச்சித்துள்ளனர்.
நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், தொடர்ந்து உயர் அதிகாரிக்கும் இது போன்ற சலுகைகளை அறிவிப்பது ஏன் என பல நிபுணர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செலவு?
ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சலுகைகளுடன் சேர்த்து, கடந்த மார்ச் காலாண்டில் செலவினங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பேடிஎம்மின் சம்பளம் 148% அதிகரித்து, 863 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சோமேட்டோவின் சம்பளம், ஊக்க சலுகைகள் சேர்த் து 112% அதிகரித்து, 407 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், பாலிசிபஜாரில் 84% அதிகரித்து, 374 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதில் நய்கா நிறுவனம் மட்டும் 32% அதிகரிப்புடன் 91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
zomato plans to allot 4.66 crore shares to employees
zomato plans to allot 4.66 crore shares to employees/சோமேட்டோ சரிவுக்கு இதுவும் காரணமா.. உஷாரா இருங்க.. !