’படிக்க வேண்டாம்; கல்யாணம் பண்ணிக்கோ’.. பெற்றோரின் அழுத்தத்தால் இளம்பெண் எடுத்த முடிவு

விழுப்புரத்தில் உயர்கல்வி படிப்பதற்கு மறுப்பு தெரிவித்து திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் வற்புறுத்தியதால் 12ஆம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். 
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்ட கிராமம் சு.பில்ராம்பட்டு. இந்த கிராமத்தில் வசிப்பவர் நல்லேந்தரன் என்பவரது மகள் வினோதினி. இவர் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்த நிலையில் மாணவியின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் மாணவி வினோதினி உயர்கல்வி பயில வேண்டும் எனக் கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி வினோதினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
image
இதனையடுத்து மாணவியை காணவில்லை என உறவினர்கள் ஊர் முழுவதும் தேடி சென்றுள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் அவர்களது கிணற்றில் உள்ள நீரை இறைத்து தேடியுள்ளனர். பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் கிணற்றில் இருந்து மாணவியின் உடலை மீட்டுள்ளனர். மாணவி இறப்பு குறித்த தகவலறிந்து அங்கு வந்த அரகண்டநல்லூர் போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.