லண்டன் கோடீஸ்வர இளம்பெண் வெளியிட்ட பல கோடி பண பரிசு அறிவிப்பு! ஆனா இதை செய்யனுமாம்


லண்டனை சேர்ந்த பெரும் கோடீஸ்வர பெண் திருடு போன தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பெரிய வெகுமதியை அறிவித்துள்ளார்.

பிரித்தானிய கோடீஸ்வரரான Bernie Ecclestoneன் மகள் பெயர் Tamara Ecclestone. இவர் தனது கணவர் Jay Rutland மற்றும் மகள் Sophiaவுடன் கடந்த 2019 டிசம்பரில் பின்லாந்துக்கு சுற்றுலா சென்றார்.

அப்போது லண்டனில் உள்ள Tamara வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் $31 மில்லியன் (ரூ.11,01,63,42,900.00) மதிப்புள்ள நகைகள் மற்றும் கடிகாரங்களை கொளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதான நிலையில் கடந்தாண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

லண்டன் கோடீஸ்வர இளம்பெண் வெளியிட்ட பல கோடி பண பரிசு அறிவிப்பு! ஆனா இதை செய்யனுமாம் | London Billionaire Daughter Offers Huge Reward

(Instagram/tamaraecclestoneofficial)

நான்காவது நபர் டேனியல் வுகோவிச்சை (செரிபியா நாட்டை சேர்ந்தவர்) என நீதிமன்றத்தில் அடையாளம் காணப்பட்டார்.
டேனியல் லண்டனில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள செர்பிய அதிகாரிகள் அவரை நாடு கடத்த அனுமதிக்காததால், பெல்கிரேடிற்கு தப்பிச் சென்றார் என்று கருதப்படுகிறது.

இந்த கொள்ளையில் இதுவரையில் ரூ 5.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து Tamara வெளியிட்ட அறிவிப்பில் என்னுடைய $31 மில்லியன் (ரூ.11,01,63,42,900.00) மதிப்புள்ள நகைகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு $7.2 மில்லியன் பணம் வெகுமதி பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

லண்டன் கோடீஸ்வர இளம்பெண் வெளியிட்ட பல கோடி பண பரிசு அறிவிப்பு! ஆனா இதை செய்யனுமாம் | London Billionaire Daughter Offers Huge Reward

GETTYSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.