பெங்களூரு : அகில இந்திய காங்கிரஸ் தாலைவர் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதை கண்டித்து, பெங்களூரில் காங்கிரஸ் தலைவர்கள் மவுன சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதை கண்டித்து, நாடு முழுதும் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பெங்களூரில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவன் முன், அக்கட்சியின் கர்நாடக தலைவர்கள் மவுன சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் சிவகுமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, மேலிட செயலர் மயூரா ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.காய்ச்சலால் அவதிப்படும் சித்தராமையா, நாள் முழுதும் முக கவசம் அணிந்து கொண்டிருந்தார். உடல் நிலை சரியில்லாததால், சிறிது நேரத்துக்கு பின் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார். பெரும்பாலான தலைவர்கள் மொபைல் போனில் மூழ்கினர்.போராட்டத்தில் சிவகுமார் பேசியதாவது:
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சோனியாவிடம் இரண்டாவது நாளாக விசாரிக்கப்படுகிறது. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் விசாரிக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற வழக்குகளில் பா.ஜ.,வினரிடம் விசாரிக்கப்படவில்லை.சோனியா, எங்கள் தாய்; ராகுல், எங்கள் சகோதரர். எதற்கும் நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement