Infinix Smart 6 Plus: ஜூலை 29 வெளியாகும் மலிவு விலை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ்!

Infinix Smart 6 Plus Flipkart: புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூலை 27 அன்று இந்தியாவில் வெளியிடப்படுகிறது. எச்டி+ டிஸ்ப்ளே, விர்ச்சுவல் ரேம் ஆதரவு, 5000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான மைக்ரோ தளம் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சில விவரங்கள், போனின் டிசைன் போன்றவற்றை மட்டுமே இதில் வெளிப்படுத்தியுள்ளது.

மேலதிக செய்தி:
மோடியால் போன் விற்பனை ஜோர்; PLI திட்டத்தால் கிடைத்த பயன்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்மார்ட் 6 போனை நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. விலையை வைத்து பார்க்கும்போது புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் போனின் அம்சங்கள் சிறப்பானதாக இருக்கிறது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் எதிர்பார்க்கப்படும் விலை (Infinix Smart 6 Plus Expected Price in India)

இந்த போனின் புராசஸர், கேமராவை குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 போலவே இது குறைந்த விலை போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதாவது இதன் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியன்ட் விலை ரூ.10,000க்கும் குறைவாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Netflix எடுத்த அதிரடி முடிவு – இனி ஆப்பிள் ஐபோன் பயனர்கள் 30% வரி செலுத்த வேண்டாம்!

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 பிளஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் (Infinix Smart 6 Plus Expected Specs)

பிளிப்கார்ட் மைக்ரோ தளத்தில் போனின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன்படி நாட்ச் டிஸ்ப்ளே உடன் இந்த போன் வெளியாகும். இதன் அருகில் செல்பி கேமராவுக்கான இரண்டு எல்இடி பிளாஷ் லைட்டுகள் கொடுக்கப்படும்.

புகைப்படம், வீடியோக்கள் எடுப்பதற்காக இரண்டு பின்பக்க கேமராக்கள் இருக்கும். செவ்வக வடிவிலான கேமரா அமைப்பினுள் லென்ஸ்கள் இருக்கும். பின்பக்கம் கைரேகை சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி:
5G Auction: வேற யாருக்கும் இந்த தைரியம் வரல; உயர்தர சேவை வழங்க 700 Mhz Band-இல் கைவைக்கும் ஜியோ!

பொதுவாக தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்களில் பின்பக்கம் கைரேகை சென்சார் கொடுக்கப்படுவதில்லை. எனினும் போனின் டிசைன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே அளவு 6.82 இன்ச் ஆக இருக்கும். இது ஒரு எச்டி+ எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே ஆகும்.

விர்ச்சுவல் தொழில்நுட்பத்துடன் வரும் 3ஜிபி LPDDR4X ரேம் + 3ஜிபி ரேம் வேலைகளை தடையில்லாமல் செய்ய முடியும். இந்த போனில் 5,000mAh பேட்டரி வழங்கப்படும். போனை சார்ஜ் செய்ய பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்படுமா என்பதை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.