ITR 2022: வருமான வரி தாக்கலுக்கு அவசியம் இந்த 10 ஆவணங்கள் தேவை.. !

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். இம்முறை மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு இருக்காது. ஆக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 – 22ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. ஜூலை 25 வரையில் 3 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். முந்தைய நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கலின்போது கடைசி நேரத்தில் பலரும் வருமான வரி தாக்கல் செய்தனர். இதனால் பலர் கடைசி நேரத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆக அப்படி வருமான வரி தாக்கல் செய்யும்போது கட்டாயம் நீங்கள் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

மாருதி சுசூகி-ன்னா சும்மாவா.. வாயை பிளக்கவைக்கும் வளர்ச்சி..!

பான் கார்டு

பான் கார்டு

நிரந்தர கணக்கு எண் என கூறப்படும் பான் நம்பர், 10 இலக்க எண்ணாகும். இது இன்று அனைத்து நிதி பரிவர்த்தனைகளை கண்கானிக்க பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாக உள்ளது. இதனாலேயே அனைத்து நிதி சார்ந்த பரிவர்த்தனைகளிலும் பெரும்பாலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கிகளில் பெரியளவில் பரிவரித்தனை செய்யும்போது அவசியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறு பரிவர்த்தனையின்போது நீங்கள் சரியான ஆவணத்தை கொடுக்காவிட்டால், 20% வரியை நிறுத்தி வைக்கலாம். விவரங்கள் இருந்தால் உங்கள் வரி விகிதம் 10% ஆக இருக்கலாம்.

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

12 இலக்க நம்பரை கொண்ட ஆதார் கார்டு, அனைத்து வகையான பரிவர்த்தனைகளிலும் அவசியமானதாக மாற்றி வருகின்றது. இந்த தனித்துவமான எண் UIDAI -ஆல் வழங்கப்படுகின்றது. ஆதார் கார்டு மூலம் இ- வெரிபிகேஷன் செய்து, வருமான வரி தாக்கலை செய்து கொள்ளலாம். இதற்காக ஆதார் கார்டில் பதிவு செய்த மொபைல் நம்பர் வேண்டியிருக்கும்.

பார்ம் 16
 

பார்ம் 16

நீங்கள் மாத சம்பளம் வாங்குபவர் எனில் கட்டாயம் பார்ம் 16 (Form 16) தேவை. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அளிக்கும் இந்த படிவத்தில் டிடிஎஸ் எவ்வளவு பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடப்படிருக்கும். ஆக நீங்கள் மாத சம்பளம் வாங்கும் ஊழியர் எனில் கட்டாயம் இதனை வைத்திருக்க வேண்டும்.

பார்ம் 26 ஏஎஸ்

பார்ம் 26 ஏஎஸ்

பார்ம் 26 ஏஎஸ் (Form 26AS) என்பது டிசிஎஸ், டிடிஎஸ் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் போன்ற வரி தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் பான் எண்ணின் அடிப்படையில் பதிவு செய்யும் ஒரு ஒருங்கிணைந்த அறிக்கையாகும். தொடர்புடைய நிதியாண்டின் போது பெறப்பட்ட பணத்தைத் திரும்பப்பெறுதல் பற்றிய விவரங்களும் இதில் இருக்கும்.

வங்கி ஸ்டேட்மெண்ட்

வங்கி ஸ்டேட்மெண்ட்

நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய வருடத்திற்கான வங்கி ஸ்டேட்மெண்டினை வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கணக்கில் எவ்வளவு வருமானம் வந்தது? எவ்வளவு வட்டி வருவாய்? வட்டி செலவு உள்ளிட்டவை கணக்கிட்டு கொள்ள முடியும்.

வங்கி வட்டி சான்றிதழ்

வங்கி வட்டி சான்றிதழ்

ஒரு நிதியாண்டில் உங்கள் கணக்கில் எவ்வளவு வருமானம் கிடைத்தது. அதற்கான வருமானம் எவ்வளவு என்பதை கையில் வைத்திருக்க வேண்டும். இதனை இனைய வங்கிகளில் கூட பெற முடியும். 80டிடிஏவின் கீழ் ஒரு நிதியாண்டில் வங்கி சேமிப்பின் கணக்கின் மூலம் 10,000 ரூபாய் வரையில் ஈட்டப்படும் தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

வீட்டுக் கடனுக்கான வட்டி சான்றிதழ்

வீட்டுக் கடனுக்கான வட்டி சான்றிதழ்

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதற்கான வட்டி சான்றிதழை வங்கியிலோ அல்லது இணைய வங்கியிலோ கூட பெற்றுக் கொள்ளலாம். வீடு வாங்குபவர்கள், வீட்டுக் கடனுக்கு செலுத்தப்படும் வட்டிக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாயினை பிரிவு 24 பியின் கீழ் ஏற்கனவேசேமிக்க முடியும்.

மூலதன ஆதாய வரி

மூலதன ஆதாய வரி

பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் மற்றும் வீடு உள்ளிட்டவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு கிடைகும் ஆதாயங்களுக்கு செலுத்த வேண்டிய வரியாகும். இதில் நீண்டகால குறுகிய கால ஆதாய வரி என பிரிக்கப்பட்டுள்ளது. ஆக இதற்காக ஸ்டேட்மெண்டினையும் நீங்கள் வைத்திருப்பது அவசியம்.

வெளி நாட்டு வருமானம்

வெளி நாட்டு வருமானம்

நீங்கள் வெளிநாட்டில் இருந்து வருமானம் ஈட்டினாலும் அதற்கும் வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக வருமான வரி தாக்கல் செய்யும் முன்பு அதற்காக ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே உங்களால் சரியான நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ITR 2022: These 10 documents are essential for income tax filing

ITR 2022: These 10 documents are essential for income tax filing/ITR 2022: வருமான வரி தாக்கலுக்கு அவசியம் இந்த 10 ஆவணங்கள் தேவை.. !

Story first published: Wednesday, July 27, 2022, 18:19 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.