ஒலிம்பியாட் விழா: சங்க காலம் முதல் சமகாலம் வரை – கமல் குரலில் வியக்கவைத்த நிகழ்த்துக் கலை

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.

4-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்குச் சென்றார். அரங்கில் நடைபெற்று வரும் தொடக்க விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் அனைவரையும் வியக்க வைத்தது.

அகழ்வாய்வு தொடங்கி தமிழகர்களின் நாட்டுபுற நடனம், ஜல்லிக்கட்டு, கல்லணை, திருக்குறள், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகம் கலை, இலக்கியம், வரலாறு, நீர் பாசனம், வீர விளையாட்டு போன்றவற்றை கண் முன்னே கொண்டு வரும் வகையில் மின்னும் விளக்குகளின் ஒளியில் ஊடாக கொண்டுவரப்பட்டது. அதோடு இணைந்த நடன நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரலை இங்கே…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.