கூகுள் நிறுவனத்தால் 39 முறை நிராகரிக்கப்பட்டவருக்கு நிகழ்ந்த அதிசயம்!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். கூகுளில் வேலை செய்கிறோம் என்று சொன்னாலே வெளி உலகில் மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

கூகுளில் வேலை செய்வது என்பது அரசு வேலையை விட அதிக சம்பளமும் வசதிகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளைஞர் ஒருவர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக 39 முறை முயற்சி செய்து நிராகரிக்கப்பட்ட பின் கடைசியாக அவருக்கு வேலை கிடைத்துள்ளது. அந்த இளைஞரின் விடாமுயற்சி குறித்து தற்போது பார்ப்போம்.

டிசிஎஸ், இன்போசிஸ் போலவே கூகுள், மைக்ரோசாப்ட்.. கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது..!

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த டைலர் கோஹன் ஒரு உதாரணமாக இருக்கிறார். அவரை சிலர் பைத்தியம் என்று கூட அழைத்தார்கள். எதனால் என்று நினைக்கின்றீர்களா? அவர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக 39 முறை விண்ணப்பித்து அனைத்து முறையும் நிராகரிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு தற்போது அதே கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

2019 முதல் 2022 வரை

2019 முதல் 2022 வரை

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்த டைலர் கோஹன் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு ஒன்று அல்ல இரண்டு முறை அல்ல, 39 முறை வேலைக்கு விண்ணப்பித்தார். கூகுள் உடனான அனைத்து மின்னஞ்சல் தகவல்தொடர்புகளின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் ஜூலை 19 அன்று தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 39 முறை அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடைசியாக கூகுள் அவருக்கு அசோசியேட் மேனேஜர் – ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் என்ற வேலையை கொடுத்துள்ளது.

நிராகரிப்பு
 

நிராகரிப்பு

கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்டு டைலர் கோஹன் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவர் நிராகரிக்கப்பட்டார். அதன்பின்னர், அவர் 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டு முறை விண்ணப்பித்தார். இரண்டு முறையும் அவர் நிராகரிக்கப்பட்டார். ஒரு சிறிய இடைவெளி விட்டு கொரோனா தொற்றுநோய்களின் போது 2020ஆம் ஆண்டு மீண்டும் ஜூன் மாதம் விண்ணப்பிக்க தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு முறையும் கூகுள் நிறுவனத்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது.

லிங்க்டுஇன் பதிவு

லிங்க்டுஇன் பதிவு

இதுகுறித்து டைலர் கோஹன் தனது லிங்க்டுஇன் பதிவில் ‘விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு சிறு கோடு மட்டுமே உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சித்தேன். 39 முறை நிராகரிக்கப்பட்ட பின்னர் தற்போது எனக்கு கூகுளில் வேலை கிடைத்துள்ளது என்று அவர் லிங்க்டுஇன் இடுகையில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவை கிட்டத்தட்ட 35,000 பேர் லைக்ஸ் செய்துள்ளனர் என்பதும், 800க்கும் மேற்பட்ட பயனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூகுள் கருத்து

கூகுள் கருத்து

டைலர் கோஹனின் இந்த விடா முயற்சி குறித்து கூகுள் நிறுவனம் கூறியபோது, ‘என்ன ஒரு பயணம், டைலர்! இது நிச்சயமாக உங்களுக்கான நல்ல நேரம்’ என்று பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After Being Rejected 39 Times Man Finally Gets Job At Google!

After Being Rejected 39 Times Man Finally Gets Job At Google! | கூகுள் நிறுவனத்தால் 39 முறை நிராகரிக்கப்பட்டவருக்கு நிகழ்ந்த அதிசயம்!

Story first published: Thursday, July 28, 2022, 9:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.