கேரளாவில் போதுமான பெட்ரோல் இல்லை என பைக் ஓட்டுனருக்கு அபராதம்: மென்பொருள் பிரச்சனையால் குளறுபடி என அதிகாரிகள் விளக்கம்

திருவனந்தபுரம்: மோட்டார் சைக்கிளில் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லை என்று கூறிய இளைஞருக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ள வினோத நிகழ்வு கேரளாவில் அரங்கேறியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியை அடுத்துள்ள பூக்காட்டுபள்ளியை சேர்ந்த பஷில்ஷியாம் என்ற இளைஞர், பணிக்கு தாமதமானதால் ஒருவழி பாதையில் தவறுதலாக சென்றுவிட்டார். அப்போது மோட்டார் சைக்கிளுடன் அவரை மடக்கி பிடித்த கொச்சி காவல்துறையினர், ரூ.250 அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டிவிட்டு அவலுவலகத்திற்கு சென்ற ஷியாம் ஓய்வு நேரத்தில் ரசீதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அபராதத்திற்கான காரணம் மோட்டார் சைக்கிளில் போதுமான அளவுக்கு எரிபொருள் இல்லையென்று அதில் லகுறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ரசீதின் மகளுடன் சமூக வலைத்தளங்களில் ஷியாம் அதனை பதிவிட்டார். ஷியாமின் பதிவு வைரலானதை அடுத்து, அவரை தொடர்பு கொண்ட மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் மென்பொருளில் ஏற்பட்ட பழுதால் குளறுபடி ஏற்பட்டதாக விளக்கமளித்துள்ளனர்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.