செஸ் ஒலிம்பியாட்: 87 பேருந்துகளில் நேரு விளையாட்டு அரங்கம் வந்த சதுரங்கப் படை

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள 87 பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று மதியம் முதல் 87 பேருந்துகளில் மாமல்லபுரத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் அழைத்துவரப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகரின் உள்ளே 8 இடங்களில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறை சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.