டிவி விவாதத்தில் மயங்கி விழுந்த தொகுப்பாளர்… ஆடிப்போன ரிஷி சுனக்..!

இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமர் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவர் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இருவரில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் கடந்த மாதம் 7ஆம் தேதி பதவி விலகியதை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ததற்கான களத்தில் 11 பேர் இருந்தனர்.

ஆனால் தற்போது முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் டிரஸ் ஆகிய இருவர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

ஆர்டர் வாங்க மறுத்த மெக்டொனால்ட் உணவகம்… சுவரேறி குதித்த இளம்பெண்ணால் பரபரப்பு!

 ரிஷி சுனக் - லிஸ் ட்ரஸ்

ரிஷி சுனக் – லிஸ் ட்ரஸ்

இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு செயலர் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவருமே பிரச்சாரங்களை விறுவிறுப்பாக்கி வரும் நிலையில் இருவரும் நேருக்கு நேர் கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சி ஒன்றை இங்கிலாந்து நாட்டின் தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்தது.

டிவி விவாத நிகழ்ச்சி

டிவி விவாத நிகழ்ச்சி

இந்த டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ்ஆகிய இருவரும் காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தனர். வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், தான் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்த தனது கருத்தை முன்வைத்துக்கொண்டிருந்தார்.

லிஸ் ட்ரஸ்
 

லிஸ் ட்ரஸ்

இந்த நாட்டில் 70 ஆண்டுகளாக நாம் பெற்றுள்ள அதிக வரிச்சுமையை தற்போது நாம் கொண்டிருப்பது தவறு. மேலும் வரிகளை உயர்த்தாத எங்கள் அறிக்கையின் உறுதிப்பாட்டை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த விவாதத்தில் லிஸ் ட்ரஸ் உறுதிமொழி அளித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்

முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்

முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது உறுதிமொழியில் தான் பிரதமர் ஆனால் இந்த ஆண்டின் வீட்டு எரிசக்தி கட்டணங்களுக்கான 5 சதவீத மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) விகிதத்தை ரத்து செய்வதாக கூறினார். ஆனால் அவர் லிஸ் ட்ரஸ் போல் வரிக்குறைப்புக்கு உறுதியளிக்கவில்லை. அதற்கு பதிலாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும், இந்தத் திட்டம் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளை கொண்ட குடும்பங்களுக்கு உதவும் என்று அவர் கூறினார்.

தொகுப்பாளினி மயக்கம்

தொகுப்பாளினி மயக்கம்

இவ்வாறு இந்த விவாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கேட் மெக்கான் திடீரென மயங்கி விழுந்தார். பெண் தொகுப்பாளர் மயங்கி விழுந்ததைக் கண்டதும் உடனடியாக ஆடி போன முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அவருக்கு அருகில் சென்று அவரது உடல்நிலை என்ன என்பது குறித்து பரிசோதனை செய்தார். அதேபோல் லிஸ் ட்ரஸ் உடனடியாக மயங்கி விழுந்த பெண் தொகுப்பாளர் அருகில் சென்று அவரை பரிசோதித்தார். இதன் பின்னர் இருவரும் அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நிகழ்ச்சி ரத்து

நிகழ்ச்சி ரத்து

இந்த நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென மயங்கி விழுந்ததால் இந்த நிகழ்ச்சி பாதியில் ரத்து செய்யப்படுவதாகவும் அதற்காக பார்வையாளர்களிடம் தாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியின் போது மயங்கி விழுந்த கேட் மெக்கான் தற்போது உடல் நலமுடன் இருக்கிறார் என்ற தகவல் வெளியானதை அடுத்து ரிஷி சுனக் மற்றும் லிட் டிரஸ் ஆகிய இருவரும் தங்களது மகிழ்ச்சியை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

செருப்பு அணிந்து டூவீலர் ஓட்டினால் ரூ.1000 அபராதமா? என்னங்க இது புதுக்கதையா இருக்கு?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rishi Sunak rushes to the aid of TV host who fainted during debate

Rishi Sunak rushes to the aid of TV host who fainted during debate | டிவி விவாதத்தின்போது மயங்கி விழுந்த தொகுப்பாளர்… ஆடிப்போன ரிஷி சுனக்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.