பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய வம்சாவளிச் சிறுவன்: அச்சம் தெரிவித்துள்ள பெற்றோர்…

பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய வம்சாவளிச் சிறுவனின் பெற்றோர், இப்படி ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் உயிரிழப்புகள் தங்கள் மகனுடன் முடிவடையப்போவதில்லை என்று அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த மாதம் தன் நண்பர்களுடன் வேல்ஸிலுள்ள Taff நதியில் விளையாடிக்கொண்டிருந்த ஆர்யன் கோனியா என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.

இந்நிலையில், நதிகள் முதலான நீர்நிலைகளின் அருகே பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஆபத்தான இடங்களைக் காட்டும் அறிவிப்புப் பலகைகள் வைக்கவேண்டும் என ஆர்யனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

அத்துடன், ஆர்யன் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, அவனுடைய நண்பனுடைய தந்தை தண்ணீரில் குதித்து அவனைக் காப்பாற்ற முயன்றது குறித்த ஒரு தகவலையும் தெரிவித்துள்ளார்கள் ஆர்யனின் பெற்றோர்.

பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய வம்சாவளிச் சிறுவன்: அச்சம் தெரிவித்துள்ள பெற்றோர்... | Indian Origin Boy Parents Fear

FAMILY PHOTO 

ஆர்யனின் நண்பனுடைய தந்தை ஆர்யனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தபோது, தண்ணீருக்குள் ஏராளமான ட்ராலிகள், டயர்கள், உலோகத் துண்டுகள் மற்றும் ட்ராலிகள் போன்ற குப்பைகள் நிறைந்திருந்ததாக தெரிவித்துள்ள ஆர்யனின் உறவினர்கள், மக்கள் இத்தகைய பொருட்களைப் போட்டு நதியைக் குப்பையாக்கவேண்டாம் என்றும், அதிகாரிகள் மக்கள் உயிர்களைக் காப்பாற்றும் வகையில் நதிகளை சுத்தப்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஆர்யனின் பெற்றோர், இப்படி ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் உயிரிழப்புகள் தங்கள் மகனுடன் முடிவடையப்போவதில்லை என்று அச்சம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் கூற்று மெய்தானோ என எண்ணத்தூண்டும் வகையில், ஆண்டுதோறும் பிரித்தானியாவில் தண்ணீர் தொடர்பில் சராசரியாக 600 பேர் உயிரிழப்பதாக வேல்ஸ் தண்ணீர் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுவது குறிப்பிடத்தக்கது.
 
பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய வம்சாவளிச் சிறுவன்: அச்சம் தெரிவித்துள்ள பெற்றோர்... | Indian Origin Boy Parents Fear

DAVID CARGILL 

பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய வம்சாவளிச் சிறுவன்: அச்சம் தெரிவித்துள்ள பெற்றோர்... | Indian Origin Boy Parents Fear

MARK LEWIS 

பிரித்தானியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய வம்சாவளிச் சிறுவன்: அச்சம் தெரிவித்துள்ள பெற்றோர்... | Indian Origin Boy Parents Fear

FAMILY PHOTO 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.