அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான சுற்றறிக்கை

இலங்கை அதிபர் சேவையில் மிகை ஊழியர் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு தரம் 2, தரம் 3 ல் சேர்த்துக் கொள்ளப்பட்ட அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய பதவி உயர்வு வழங்குவதற்கான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இலங்கை அதிபர் சேவையின் மிகை ஊழியர் அடிப்படையில் 2012.08.08 ஆம் திகதி நியமனம் செய்யப்பட்ட 3,200 அதிபர்கள் இவ்வாறு பதவி உயர்வை பொறுவார்கள்.

இலங்கை அதிபர் சேவையின் மிகை ஊழியர் அடிப்படையில் 06 வருட சேவையை பூர்த்தி செய்த, வினைத்திறன்காண் பரீட்சையில் சித்தி பெற்ற, சேவையில் நிரந்தரமாக்கப்பட்டோர் சேவையின் முதலாம், இரண்டாம் தரத்திற்கு பதவி உயர்வை பெற தகுதியுடையவர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.