சியோமி ரூ.80,000 கோடி திட்டத்துக்கு முட்டுக்கட்டை.. சீனா அரசு ஒப்புதல் கொடுப்பதில் சிக்கல்..!

உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சியோமி பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு டெஸ்லா-வுக்குப் போட்டியாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்திற்காகச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதாக அறிவித்த சியோமிக்கு பெரும் தடை ஏற்பட்டு உள்ளது, சீன நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் தான் பிரச்சனை என்றால் தற்போது உள்நாட்டிலும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

சியோமி, ஹூவாய்

சியோமி, ஹூவாய் போன்ற பல சீன டெக் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாகவே டெஸ்லா-வின் வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு எலக்ட்ரிக் வாகன பிரிவில் இறங்க வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகின்றனர். இதில் ஹூவாய் தனது டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வர்த்தகத்திற்கு உலக நாடுகள் முழுவதிலும் பிரச்சனை ஏற்பட்டதால் இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கியது.

லீ ஜூன்

லீ ஜூன்

சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ ஜூன் கடந்த ஆண்டு வெளியிட்ட திட்டத்தின் படி 2024ஆம் ஆண்டுக்குள் சியோமி நிறுவனம் பெய்ஜிங்-ல் கட்ட உள்ள புதிய தொழிற்சாலையில் வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் என உற்பத்தி அளவை எட்டும் என்றும், இதைப் படிப்படியாக விரிவாக்கம் செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே சியோமி திட்டம்.

10 பில்லியன் டாலர்
 

10 பில்லியன் டாலர்

ஆனால் தற்போது சியோமி-யின் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரிக் வாகன உற்பத்தி திட்டத்திற்குச் சீன அரசு நிர்வாகம் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்துள்ளது. இது சியோமி தலைவர் லீ ஜூன் கனவு திட்டத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம்

தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம்

சியோமி நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கச் சீன அரசிடம் இருந்து உரிமம் பெற பல மாதங்களாக அந்நாட்டு தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

BYD மற்றும் NIO

BYD மற்றும் NIO

சீனாவில் ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாக BYD மற்றும் NIO என்னும் இரு எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது, ஏற்கனவே இவ்விரு நிறுவனங்களும் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விற்பனைக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் சியோமி வருகை சூழ்நிலையைக் கடுமையாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சியோமி உரிமம் பெற முடியாமல் நிற்கிறது.

1000 ஊழியர்கள்

1000 ஊழியர்கள்

சியோமி தனது எலக்ட்ரிக் வாகன பிரிவில் மட்டும் சுமார் 1000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது, இந்த 1000 ஊழியர்களில் பெரும் பகுதியினர் கார் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக விரிவாக்கப் பிரிவில் இருப்பவர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Xiaomi cant able to get license for $10 billion electric vehicle project; hit with regulatory barrier

Xiaomi cant able to get license for $10 billion electric vehicle project; hit with regulatory barrier சியோமி-க்கு முட்டுக்கட்டை.. சீனா அரசு ஒப்புதல் கொடுப்பதில் சிக்கல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.