Asus Zenfone 9: கைக்குள்ள இருக்கும்; ஆனா ஏசஸ் சென்ஃபோன் 9 பவர் வேற லெவல்!

Asus Zenfone 9 Price in India: தைவான் நிறுவனமான Asus தனது புதிய பிளாக்‌ஷிப் பிரீமியம் போனை அறிமுகம் செய்துள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும், திறனில் பல மடங்கு அதிக அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. புதிய தலைமுறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றில் சிறியதும், திறன் மிகுந்ததுமாக Asus Zenfone 9 தன் இடத்தை தக்கவைத்துள்ளது.

போனை பிரமிப்பானதாக மாற்ற 6 இன்சுக்கும் குறைவான அளவில் திரை, ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், கிம்பல் கேமரா, ஸ்டீரியோ மூன்று காந்தங்கள் அடங்கிய ஸ்பீக்கர்ஸ் என சொல்லிக்கொண்டே போகலாம். பல அம்சங்கள் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

5G Auction: 1800 MHz அலைக்கற்றைக்கு கடும் போட்டி; விலையை சற்று உயர்த்திப்பிடித்த அரசு!

ஏசஸ் சென்ஃபோன் 9 விலை – Asus Zenfone 9 Price

புதிய ஏசஸ் சென்ஃபோன் 9 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலின் விலை ஐரோப்பாவில் 799 யூரோக்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய மதிப்பில் ரூ.64,600 ஆக இருக்கும். ஐரோப்பிய நாடுகள், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் முதலில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

இதனை தொடர்ந்து வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு வரும். இந்தியாவில் இதன் வெளியீடு குறித்து நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஏசஸ் சென்ஃபோன் 9 சிறப்பம்சங்கள் – Asus Zenfone 9 Specifications
PC: ASUS

புதிய Asus மொபைல் 5.9 அங்குல சாம்சங் OLED திரையுடன் வருகிறது. இது 1080×2400 கொண்டதாக இருக்கிறது. இதன் ரெப்ரெஷ் ரேட் 120Hz ஆக உள்ளது. மேலும், டச் சேம்பிளிங் ரேட் 240Hz ஆகும். 1,100 நிட்ஸ் வரை பீக் பிரைட்னைஸை ஆதரிக்கும் இந்த டிஸ்ப்ளே, HDR10+ ஆதரவையும் பெறுகிறது.

இன்னும் கூடுதலாக பல டிஸ்ப்ளே அம்சங்களை கொண்டிருக்கும் இந்த ஏசஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் பெரிய லிக்விட் கூலிங் வேப்பர் சேம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. போனை சூடாக்காமல் இந்த தொழில்நுட்பம் பாதுகாக்கும்.

Google Street View: இனி உங்க வாழ்க்கைய ரொம்ப நிம்மதியா வாழலாம் – கூகுள் உங்களுக்கு வழிகாட்டும்!

ஸ்மார்ட்போனில் மெமரி தேவைகளுக்காக 8ஜிபி / 16ஜிபி LPDDR5 ரேமும், 128ஜிபி / 256ஜிபி UFS 3.1 ஸ்டேரேஜ் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. ZenUI ஸ்கின் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தின் மேல் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கேமராவை பொருத்தவரை, 50 மெகாபிக்சல் சோனி IMX766 சென்சார் 6 ஆக்சிஸ் கிம்பல் ஸ்டெபிலைசேஷன் உடன் 12 மெகாபிக்சல் சோனி IMX363 113 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ் ஆகியவை அடங்கிய இரண்டு கேமரா அமைப்புகள் உள்ளன. செல்பி கேமராவாக 12 மெகாபிக்சல் சோனி IMX663 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்ஃபோன் 9 பிற அம்சங்கள்

போனில் இரண்டு ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 7 காந்த அமைப்பு கொண்ட ஸ்பீக்கர் மேல் பாகத்திலும், 3 காந்த அமைப்பு கொண்ட ஸ்பீக்கர் கீழ் பாகத்தில் அமைந்திருக்கும். குவால்காம் aptX, DIRAC டியூனிங் போன்ற ஒலி அம்சங்கள் இதில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும் 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற பல அம்சங்களை நிறைந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4300mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 30W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Asus-Zenfone-9 விவரங்கள்முழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.