ஆட்டோ புக் செய்ய இனி ஆப் அவசியமில்லை… ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்!

அவசர தேவைக்கு ஆட்டோ, கார் தேவை என்றால் உடனே ஓலா, உபெர் போன்ற கேப் சர்வீஸ் நிறுவனங்களின் செயலியில் முன்பதிவு செய்தால் அடுத்த சில நிமிடங்களில் நம் வீட்டின் வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது இந்தியாவிலேயே முதல் முறையாக எந்த செயலியையும் பயன்படுத்தாமல் வாட்ஸ்அப் மூலம் மட்டுமே ஆட்டோ உள்பட வாகனங்களை புக் செய்யும் முறையை கோவை ஊர் கேப்ஸ் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு அந்த பகுதி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ‘தம்பி’ வேட்டி… செம ஐடியா என பாராட்டு

வாட்ஸ் அப் மூலம் கேப்ஸ்

வாட்ஸ் அப் மூலம் கேப்ஸ்

நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் வாட்ஸ்அப் மூலம் வாகனங்களை புக்கிங் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓலா, உபெர் ஆகிய கேப் நிறுவனங்கள் தங்களது தனிப்பட்ட செயலிகள் மூலம் புக் செய்ய வேண்டும் என்ற நிலை வைத்திருக்கும் நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மூலம் தற்போது வாகனங்களை புக் செய்து கொள்ளலாம் என்ற முறையை கோவை ஊர் கேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

தொடக்க விழா

தொடக்க விழா

கோவையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த முறைக்கு அந்த பகுதி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஊர் கேப்ஸ் வாட்ஸ்அப் புக்கிங் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊர் கேப்ஸ் நிர்வாக இயக்குனர்
 

ஊர் கேப்ஸ் நிர்வாக இயக்குனர்

இந்த விழாவில் ஊர் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டனி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய சேவை திட்டம் குறித்து ஊர் கேப்ஸ் நிர்வாக இயக்குனர் மரிய ஆண்டனி அவர்கள் கூறியபோது, ‘நாட்டிலேயே முதல் முறையாக வாட்ஸ்அப் செயலி மூலம் வாகனங்களை புக்கிங் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

படிப்படியாக விரிவாக்கம்

படிப்படியாக விரிவாக்கம்

முதல் கட்டமாக ஆட்டோவுக்கு இந்த சேவையை துவங்கி உள்ளதாகவும் படிப்படியாக அனைத்து வாகனங்களுக்கும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார். மேலும் கோவை மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த சேவை திட்டத்தை படிப்படியாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவை மக்கள்

கோவை மக்கள்

தற்போது கோவை மக்கள் 8098480980 என்ற எண்ணை தொடர்பு கொண்டு எந்த இடத்தில் இருந்தும் வாட்ஸ் அப் மூலம் புக்கிங் செய்து ஊர் கேப்ஸ் சேவையை எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் வரவேற்பு

மக்கள் வரவேற்பு

ஆட்டோ, கார் புக் செய்ய அந்தந்த நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் நாம் தினமும் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மூலமாக கேப் சேவையை பெற்றுக்கொள்ளலாம் என்ற முறைக்கு கோவை மக்களிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s first WhatsApp booking auto service starts in Tamil Nadu

India’s first WhatsApp booking auto service starts in Tamil Nadu | ஆட்டோ புக் செய்ய இனி ஆப் அவசியமில்லை… ஒரே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் போதும்!

Story first published: Saturday, July 30, 2022, 11:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.