வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாகர் : மத்திய பிரதேசத்தில், ஒரே ஊசியை பயன்படுத்தி, 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தியவர் கைது செய்யப்பட்டார். இதற்கு தன் துறைத் தலைவர் தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சாகர் நகரில் உள்ள பள்ளியில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.இதில் நர்சிங் கல்லுாரி மாணவர் ஜிதேந்தர் அஹிர்வார் தடுப்பூசி செலுத்த நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது, ஒரே ஊசியை பயன்படுத்தி, 39 மாணவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தினார்.
![]() |
இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஜிதேந்தரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கிடையே, ஜிதேந்தர் அஹிர்வார் வெளியிட்டுள்ள ‘வீடியோ’வில், ‘என் துறைத் தலைவர் தான் ஒரேயொரு ஊசியை கொடுத்து அனைவருக்கும் தடுப்பூசி போடச் சொன்னார்’ என்றார். இது தொடர்பாக சுகாதாரத் துறை மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement