காமன்வெல்த் குத்துச்சண்டை – காலிறுதியில் இந்தியா

பர்மிங்காம்:
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், குத்துச்சண்டை போட்டியின் 92 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சாகர் கேமரூனின் மேக்சிம் யெக்னாங் என்ஜியோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.