இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாகப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 2 4 ஆம் தேதி நடக்க வேண்டிய இருமாத நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3-5 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று துவங்கப்பட்டது. ஆர்பிஐ-யின் ரெப்போ விகித முடிவுகளுக்காகப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் காத்திருக்கும் நிலையில் இன்று மந்தமான வர்த்தகம் மும்பை பங்குச்சந்தையில் பதிவாகியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் மெட்டல், எனர்ஜி மற்றும் ஐடி துறை பங்குகள் அதிகப்படியான முதலீட்டைப் பெற்று உயர்வுடன் காணப்பட்டாலும் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
சோமேட்டோ பங்குகள் நேற்று 20 சதவீதம் வரையில் உயர்ந்த நிலையில் பலக் டீல் வாயிலாக 300 மில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யப்படும் காரணத்தால் சோமேட்டோ பங்குகள் 2.52 சதவீதம் சரிந்து 54.20 ரூபாயாக உள்ளது.
sensex nifty live updates on 03 august 2022: IT shines; Auto, Metal drag zomato indigo vodafone
sensex nifty live updates on 03 august 2022: IT shines; Auto, Metal drag zomato indigo vodafone சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் சரிவு.. தடுமாறும் சோமேட்டோ பங்குகள்..!